வேடந்தாங்கல் பறவை கூட்டணி: அப்டேட் குமாரு
நண்பர் ஒருத்தரோட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.
அப்போம் அவரு, “சேலத்துல செய்தியாளர்களை சந்திச்ச எடப்பாடி பழனிசாமி, வேடந்தாங்கல் பறவை போல அன்புமணி ராமதாஸ் மாறி மாறி கூட்டணி வைக்குறாரு, கூட்டணி இல்லாமலேயே அதிமுக வெற்றி பெறும்னு கடுமையா விமர்சனம் பண்ணிருக்காருன்னு” சொன்னாப்ல
“அதிமுகவோடு பாமக கூட்டணி வச்சிருந்தா ஒரு உருட்டு…வைக்கலனா இன்னொரு உருட்டா”ன்னு கமெண்ட் அடிச்சிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
வசந்த்
அரசியல்வாதிகள் சாலையோர டீ கடையில் டீ குடிப்பது, சாலையில் சைக்கிள் ஓட்டுவது, பொது மக்களுக்கு துணி துவைத்துக் கொடுப்பது, குழந்தைகளை குளிக்க வைப்பது இது போல நடந்து கொண்டால் தேர்தல் வருகிறது என்று அர்த்தம்.
Mannar & company
அரசியல்வாதிகளை சந்தோஷப்படுத்த அதிகம் மெனக்கெடத் தேவையில்லை எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்னு சொன்னால் போதும்!
Mr.Ego
உடம்பு வலி இருந்தா அந்த இடத்தில் move தடவுவது…
மனசு வலி இருந்த அந்த இடத்திலிருந்து move ஆயிடுறதும் ரெண்டுமே நல்லது நமக்கு….
Mannar & company
Raid வரும் பின்னே
Donation கொடு முன்னே!
-அரசியல்மொழி
ச ப் பா ணி
மைண்ட் வாய்ஸ்னு நெனச்சிட்டு சத்தமா பேசும் இடம்தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
mohanram.ko
ஆபிஸ், வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்ல இருக்கேன் தம்பி, பஸ்ல பக்கத்துல இருக்குறவரு ஐபிஎல் ஸ்கோர் என்னன்னு கேட்கறாரு தம்பி
Kirachand
ராதிகா சரத்குமார் விருதுநகரில் போட்டி!
விஜயதரணி நவ் :
அவங்களை விட நான் எதுல குறைஞ்சிட்டேன்?
Santhiya
காதல் தோல்வினு சரக்கு அடிக்காதீங்க டா பொண்ணுங்க நிறைய இருக்கு
ஆனா உனக்கு ஈரல் ஒன்னு தான் இருக்கு..!
Kirachand
ஆளுநர் ரவி என்ன செய்து கொண்டிருக்கிறார்! – உச்ச நீதிமன்றம்
ஒன்னுமே செய்யலீங்க யுவர் ஆனர்!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கரூரில் ஜோதிமணி… திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
டிஜிட்டல் திண்ணை: தேர்தல் பட்ஜெட்… ED குறி வைக்கும் திமுகவின் மும்மூர்த்திகள்!