இன்னிக்கு நண்பரோட டீ குடிக்க கடைக்கு போயிருந்தேன்…
அவரு என்ன நண்பா இந்த ஜியோ நெட்வொர்க் ரீசார்ஜ் கட்டணத்தையும் ஏத்திட்டாங்க… டவரும் ஒழுங்கா வரமாட்டீங்குது…
5ஜியும் கிடைக்கமாட்டிங்குது புலம்புனாரு…
சரி விடுங்க பி.எஸ்.என்.எல்.க்கு மாறிடுங்கனு சொன்னென்…
அதுக்கு அவரு, ஏர் இந்தியா மாதிரி பி.எஸ்.என்.எலையும் வித்துட்டா என்ன பன்றதுனு கேக்குறாரு… இதுக்கு என்ன பதில் சொல்றது..
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ArulrajArun
டீவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இடையில் வரும் சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு போல தான் இந்த
கணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவதும் …
ஓவர் நைட் ஒபாமா
“கூட்டணி என்றால் அடிமைகள் இல்லை” – ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுகவிடம் கடுமை காட்டுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?
சரி கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியது தானே..உங்களை யார் தடுத்தா? அப்படின்னு மக்கள் கேக்குறாங்க அண்ணே
balebalu
மாநிலத்தை புனரமைக்க ₹1 லட்சம் கோடி நிதி தேவை
– ஒன்றிய நிதியமைச்சரிடம் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு கோரிக்கை
ஆனானப்பட்ட புயல் வெள்ளத்துக்கே நாங்க எதுவும் நிதி ஒதுக்கல்லபுனரமைப்புக்கா ஒதுக்குவோம்
போவியா
கடைநிலை ஊழியன்
me to சின்ன வயசு me –
நல்லா படி னு சொன்னா கேட்டியா.. இப்ப பாரு என்ன எவ்ளோ கஷ்டப்பட வைக்குற..
ச ப் பா ணி
போன் பார்க்காத டி வி பாரு.. நவீன குழந்தை வளர்ப்பு
தர்மஅடி தர்மலிங்கம்
விஜய் பேசியது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் – அண்ணாமலை
அப்போ… நீங்க பேசுறது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவாதுன்னு சொல்றீங்க.?!
சாதாரண செக் அப்…
செங்காந்தள்
எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்து விட்டார்கள்” – ஓபிஎஸ்
உங்களைத் தான் கட்சியே நிராகரித்து விட்டதே.
கோழியின் கிறுக்கல்!!
Program மாற்றப் பட்ட சிட்டி ரோபோ கிட்ட மாட்டிக்கிட்ட ஐஸ்வர்யா மாதிரி,
மனிதனிடம் மாட்டிக்கிட்டு முழிக்குது பூமி!!
ArulrajArun
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல இந்த சொந்தக்கார பயலுக நம் மீது பாசம் காட்டுவதும் …
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நெல்லையின் புதிய மேயர் யார்? மீண்டும் வஹாப் கையில் பந்து!
அஸ்ரா கார்க்…அமல்ராஜ்… : 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!