நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…
“பார்த்தீங்களா நம்ம மோடி ஜி மறுபடியும் வெளிநாட்டுக்கு டிரிப் கிளம்பிட்டாருன்னு” நண்பர் சொன்னாப்ல…
அதுக்கு நான், “இது தான் முதல் ட்ரிப் நண்பா. இன்னும் அரசு முறை பயணமா பல ட்ரிப் பிரதமர் போவாரு. ஜாலியா இருக்காருன்னு” சொன்னேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
வசந்த்
அதிமுக இணைய நான் எந்த தியாகமும் செய்ய தயார் -ஓபிஎஸ்
ஆனா தியானம் மட்டும் வேண்டாம்ணே..
ℳsd இதயவன்
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தோல்வி பயத்தால் தேர்தலில் இருந்து விலகியுள்ளது ~ உதயநிதி ஸ்டாலின்
இடைத்தேர்தல் ல எப்ப பாஸ் எதிர்கட்சி ஜெயித்தது ?!
Mannar & company
ஜெயம்’ படம் மூலம் தமிழில், நடிகையாக அறிமுகமான நடிகை சதா, இப்போது முழு நேர “வைல்டு லைஃப்” போட்டோகிராபராக மாறிவிட்டாராம்!
இனிமே ‘சதா’ இதே வேலையாதான் இருப்பாருன்னு சொல்லு!
நெல்லை அண்ணாச்சி
மணிப்பூரில்….ராகுல் காந்தி
ரஷ்யாவில்…..மோடிஜி..,
இவ்வளவுதாங்க …உலகம்…!!
Mini Messi ⚽️ pic.twitter.com/zOC4ZDFxRG
— நெல்லை செல்வின் (@selvinnellai87) July 8, 2024
ச ப் பா ணி
முடிந்தவரை கடன் வாங்காம சமாளிக்கனும்
கடன் வாங்கினா முடிந்தவரை கடன் கொடுத்தவரை சமாளிக்கனும்
பர்வீன் யூனுஸ்
ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் காணாமல் போனதுகள்ளக்குறிச்சி விஷச்சாராய மேட்டர்!
செங்காந்தள்
தாத்தா,பாட்டிகளை பேரன், பேத்திகளோடு இணைப்பவை கதைகளும் ‘ம்’ களும் தான்…!!!
ச ப் பா ணி
முடிந்தவரை கடன் வாங்காம சமாளிக்கனும்
கடன் வாங்கினா முடிந்தவரை கடன் கொடுத்தவரை சமாளிக்கனும்
Mannar & company
அம்பானி மகன் கல்யாணத்தையும்,
ஜியோ கட்டண உயர்வையும் பார்க்கும்போது தமிழ்நாட்டில் சில ஊர்களில் மொய் விருந்து நடைபெறுமே அதுதான் ஞாபகம் வருகிறது!!
ℳsd இதயவன்
மதுவிற்கு பழக்கமானவர்களை உடனடியாக நிறுத்த முடியாது படிப்படியாக குறைத்துதான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்”~ செல்லூர் ராஜூ
மாறி மாறி நடந்த திராவிட கட்சிகள் ஆட்சியில் ஒரு படி கூட குறைந்த மாதிரி தெரியலயே ?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
100 ரூபாய்க்கு டீன்ஸ் பட டிக்கெட்… பார்த்திபன் கொடுத்த பரிசு!
செந்தில் பாலாஜி மனு : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!