இன்னிக்கு நாடே ஹத்ராஸ் சாமியார் போலே பாபா யாரு யாருனு பேசிட்டு இருக்கு…
அவர பாக்க போய் கூட்ட நெரிசல்ல சிக்கி 130 பேர் வர செத்துட்டாங்க…
ஆனா அவர் மீது வழக்குப்பதிவு போடலையாம்… இத பத்தி என் நண்பன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்…
அதுக்கு அவன் சொல்றான்… இந்த சாமியார் தப்பிச்சு போய் அடுத்த கைலாசா தீவ உருவாக்கி வீடியோ போடாம இருந்தா சரிங்கிறான்,,,
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
உத்திரபிரதேசம்… மத விழாவில் 116 பேர் பலி…
# குஷ்பு க்கு தெரியாமல் பாத்துக்கோணும்…!!
Mannar & company
அலாரம் அடிக்கிறதுக்கு முன்பே முழிப்பு வந்துவிட்டாலும் அந்த அலாரம் அடித்து நாலு snooze வைத்து எழுந்து வேலைக்கு போனால்தான் திருப்தியாக இருக்கு!!
ℳsd இதயவன்
ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டிய நிலைமையில் இருக்கிறார் ~ பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத்
ஹரியானா பெண் போலீஸ்~ என்னது ?
இல்ல அந்த நிலைமையில் இருக்கிறாரோ னு கனவு கண்டேன்?!
கடைநிலை ஊழியன்
in exam hall –
மச்சான் கவலைபடாத டா.. arrears exam எழுத உன் கூட நா இருப்பேன்…
மயக்குநன்
தமிழகத்தில் கடந்த ஆண்டில் சட்டவிரோத மணல் விற்பனையால் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு!- அமலாக்கத்துறை தகவல்.
ஆகா… அரசு வருமானத்தில் யாரோ மண்ணை அள்ளிப் போட்டுட்டாங்க போலிருக்கே..?!
சரவணன். 𝓜
அது டாடா கம்பெனியா இருந்தாலும் அசோக் லேலண்ட் கம்பெனியா இருந்தாலும் மகிந்திரா கம்பெனியா இருந்தாலும் அந்த வண்டிக்கு ஒரே பேர் தான்..
“Tata Ace (டாட்டா ஏசி) ”
Vidhya
Hubby ! என்னமோ மாதிரியிருக்கு.
குடிக்க ஏதாவது கொடேன்”
“ஏங்க? சூடாவா? இல்ல ஜில்லுன்னு வேணுமா?
”தலையை வலிக்கிற மாதிரியிருக்கு. சூடாவே கொடு”.
காபியா? இல்லே டீயா?
ம்.. காபியே கொடு.
பில்டர் காபி வேணுமா? அல்லது புரூ காப்பியா?
பில்டர் காபி தான் எனக்குப் பிடிக்கும். அதையே கொடு.
நரசுஸ் காபித் தூள்ல போடவா? இல்ல காபி டேயா?
நரசுஸ் தூள்லேயே போடு.
ஸ்டிராங்கா வேணுமா? இல்லேன்னா லைட்டா வேணுமா?
ஸ்டிராங்காவே இருக்கட்டும்.
சர்க்கரை போட்டு வேணுமா? இல்லேன்னா போடாமலா?
சர்க்கரை போட்டே கொடு.
கிளாசுலே வேணுமா? இல்ல டம்ளரில தரவா?
”சே! உங்கிட்ட போய் காபி கேட்டேன் பாரு, என் புத்தியைச் செரு ப்பால
அடிக்கணும்”
”ஏங்க?உங்க செரு ப்பாலயா? இல்ல, என் செரு ப்பாலயா?”
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மோகனின் ஹரா… ஓடிடி ரிலீஸ் தேதி!