நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்கப் போயிருந்தேன்…
மாஸ்டர் கிட்ட டீ சொல்லிட்டு கடையில உட்கார்ந்து டிவி பார்த்துக்கிட்டு இருந்தோம். நியூஸ்ல நம்ம எடப்பாடி ஆவேசமா பேசிக்கிட்டு இருந்தாரு…
“சட்டப்பேரவையில் நேரடி ஒளிபரப்பு செய்து பேச வாய்ப்பு கொடுத்திருந்தா திமுக அரசை கிழி கிழி என கிழித்திருப்பேன்னு” உணர்ச்சி பொங்க பேசினாரு…
இதை பார்த்த நண்பர், “அங்க போய் பேப்பரை தான கிழிச்சி எறிவாங்க… வேற என்னத்தை கிழிக்க போறாங்கன்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை! – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
டாஸ்மாக் வருமானம் இருந்துமா?
வசந்த்
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
என்ன மீண்டும் கவர்னர் ஆகணுமா?
ஏதே.. ஆமா அதுக்கு என்ன இப்ப
பெரிய அரவிந்த் சாமி ,
மனிஷா கொய்ராலா இரெண்டு பேரும்..😂 pic.twitter.com/lxKfQRWqzK— Dr. தண்டச் சோறு (@siya_twits) June 27, 2024
balebalu
மூணாவது தடவையா ஆட்சி அமைத்ததை கூட தாங்கலாம் ஆனா
“மன் கி பாத் ” த்தும் மூணாவது தட வையா தொடரும் ங்குறதை தான்
தாங்கவே முடியாது
ஓவர் நைட் ஒபாமா
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேறி இருக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ள சாராயம் குடிச்சு சாவரதுலயும் முதன்மை மாநிலமாக மாறி வருதுண்ணு சொல்லுங்க சார்…
mohanram.ko
வீட்டில் ‘வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் தான்’ நல்லா இருப்போம்னு சொல்லி சம்பாதிக்கறாங்க, வாஸ்து நிபுணர்கள்
ArulrajArun
நமது ஊரில் இருக்கும் “பெட்டி கடைக்கு” தெரியும் நாம் எவ்வளவு “சில்லறை பார்ட்டி” என்று
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் கோடி கடன்: பெரியகருப்பன் அறிவிப்பு!
மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ!