இன்னிக்கு காலையில இருந்தே வயிறு வலி… சரினு வீட்ல இருக்க பொண்ணுக்கிட்ட போன் பண்ணி ரசம் வச்சி வைம்மானு சொல்லிட்டு ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன்…
வீட்டுக்கு போய் சாப்பாடு எடுத்து வைம்மானு சாப்பிட்டா ரசம் இனிப்பா இருந்துச்சு…
என்னம்மா ரசம் இனிப்பா இருக்குனு கேட்டா, ‘தக்காளி விலைலாம் தாறுமாறா இருக்குப்பா … ஒரு கிலோ 70, 89னு விக்குது’. அதான் வாங்காம வந்துட்டேன்…
ரசத்துக்கு தக்காளி சாஸ் ஊத்தி வச்சிட்டேன்… உங்க காச மிச்சம் பண்ணிட்டேனு சொல்றா…
என்னத்த சொல்றது…. நீதாம்மா என் லிட்டில் பிரின்சஸ்னு சொல்லிட்டு கை கழுவிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
நெல்லை அண்ணாச்சி
கள்ளக்குறிச்சி..CBI விசாரிக்கணும்..எடப்பாடியார்..
# அப்படியே ….
அந்த… ” கொடநாடு “..!!
ArulrajArun
சமூக நீதியை நிலைநாட்டிட்டு வருவார்கள் என்று பார்த்தால்
உதய’நிதி’யை நிலைநாட்டிட்டு வந்திருக்கார்கள் …
amudu
அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்தியில் சன்ஸ் ஸ்கிரீன் லோஷன் போடுவானாம்.
கடைநிலை ஊழியன்
விடாம முயற்சி பண்ணுனா, நீ ஆசப்பட்டத அடையலாம் னு சொல்றதே..
உன்ன மோட்டிவேட் பண்றதுக்காக சொல்ற பொய் தான்..
balebalu
1000 ஆண்டுகள் வரை பழுது ஏற்படாது ன்னு சொன்னதும்
சாதரண மழைக்கே மேற்கூரை ஒழுகுவதும்
ஒரே ராமர் கோவிலா
ச ப் பா ணி
E.M.I வாழ்க்கையில் சம்பளம் மட்டும் கெஸ்ட் ரோலா வந்துட்டுப் போகுது
கோழியின் கிறுக்கல்
நண்பர்கள் இரண்டே வகை தான்,
நம் பிரச்சனையை தீர்ப்பவர்கள்,
நம் பிரச்சனையை ஆரம்பிப்பவர்கள்!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பானையை வைத்து ’கேம்’ ஆடிய பாமக- ஷாக்கில் திமுக.,விசிக
கூலி டெஸ்ட் லுக்… காலா ஸ்டைலில் ரஜினி