ஆபிஸ் நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…
நண்பர் ரொம்ப யோசனையில இருந்தாரு…
“என்ன நண்பா… ஓவர் திங்கிங்ல இருக்கீங்கன்னு” அவருக்கிட்ட கேட்டேன்…
அதுக்கு, “இல்ல… போன மாசம் பாதியில இருந்து என் பசங்களுக்கு லீவ் விட்டாங்க… பாதி மாசம் லீவுக்கே கரண்ட் பில்லு 6000 ரூபா வந்துருச்சு… மே மாசம் ஃபுல்லா அவங்களுக்கு லீவு தான்… கரண்ட் பில்ல நினைச்சா தான் கெதக்குன்னு இருக்குன்னு” சொன்னாரு…
“இதெல்லாம் பத்தி யோசிக்கலாமா நண்பா… போன மாசமே எங்க வீட்ல கரண்ட் பில்லு 10 ஆயிரத்த தொட்டுடிச்சி… இந்த மாசமும் புதிய உச்சத்துல தான் மின் கட்டணம்… சோ டோண்ட் வொர்ரின்னு” அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு அங்க இருந்து ரெண்டு பேரும் கிளம்பிட்டோம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக் கூடாது!’ – சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி பிரசாரம்
#கடைசி நேரக் கூட்டணி குறித்து சொல்றாரோ
நெல்லை அண்ணாச்சி
என்ன..ஜி..இப்படி ” பொசுக் ” ன்னு சொல்லிட்டிங்க….
# டெம்போ வில் பணம்..!!
balebalu
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளரக்கூடாது: ஜி.கே.வாசன் அறிவுரை
கேக்க நல்லா தான் இருக்கு ஆனா
மாணவர்கள் பாஸ் பண்ணல்லைனா உங்களை மாதிரி கூட்டணி வெச்சு காலேஜ் (ராஜ்யசபா) சீட் வாங்க முடியாதே
கவலை பட்டுதானே ஆகனும்
ச ப் பா ணி
மழை காரணமாக பெங்களூரு-பஞ்சாப் இடையேயான ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
#அக்னி நட்சத்திரத்தில அடை மழையா
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பைக்லயும் கார்லயும் ஓட்றவங்களை விட கூட போறவங்க தான் rear view mirror ல அதிகமா பார்த்துட்டு போறாங்க..
உயிர் மேல அவ்வளவு அக்கறை.
குருநாதா
அட்சயதிருதியை முன்னிட்டு
தமிழகம் முழுவதும் நள்ளிரவும் நகைக்கடைகள் திறப்பு -செய்தி
திருடர்:இந்த வருசம் நமக்கு அட்சயதிருதி இல்லடி
Mr.Ego
“அட்சயதிருதி அன்னைக்கு நகை வாங்குனா செல்வம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம்…”
“யாருக்கு….”
“நகைக்கடக்காரர்க்கு….”
கோழியின் கிறுக்கல்!!
அடி மேல் அடி விழுந்தால் பலருக்கு வெறுப்பு வரும்,
ஒரு சிலருக்கு தான் பொறுப்பு வருகிறது!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
சாய் பல்லவிக்கு “அமரன்” டீமின் பிறந்தநாள் கிஃப்ட்..!
‘மாயா ஒன்’ டீசர்: புது சூப்பர் ஹீரோ.. பிரம்மிக்க வைக்கும் காட்சிகள்..