‘என்னப்பா ஆச்சு… உங்க தளபதி விஜய் நடிச்ச லியோ படத்தோட ஆடியோவை ஆஃப் பண்ணிட்டாங்களாமே… அப்படின்னு நம்ம வட்டாரத்தில் இருந்த ஒரு மக்கள் இயக்க தம்பிய லேசா உசுப்பி விட்டேன்.
அதுக்கு அந்த தம்பி, ‘லியோ படத்தோட ஆடியோ லாஞ்ச் பங்ஷனை நேரு உள் விளையாட்டு அரங்கத்துல நடத்த ப்ரொடியூசர் ஏற்பாடு பண்ணி இருந்தாரு. அங்கதான் தப்பு நடந்து போச்சு. எங்கேயாவது வெளி விளையாட்டு அரங்கமா பார்த்து ஏற்பாடு பண்ணி இருந்தா பங்க்ஷன் நல்லபடியா நடந்திருக்கும். இது உள் விளையாட்டு அரங்கமாச்சே.. அதனால ஏதாச்சும் உள்விளையாட்டு விளையாடியிருப்பாங்க… ‘ அப்படின்னு சொல்லிட்டு அசால்ட்டா சிரிச்சாப்ள.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
யாருடன் கூட்டணி என்பது குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – ஜி.கே.வாசன்
எம் பி சீட் யாரு எப்போ கொடுப்பாங்களோ அதான சரியான நேரம்
வில்லாதி வில்லன் 2.0
என் பெயரில் வீடு இல்லை – மோடி
சின்ன தம்பி பாட ஆரம்பிச்சிடான்.. இனி எலக்சன் முடியுற வரை நிறுத்தவே மாட்டான்!
Kirachand
அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை.அதை கட்டிவைத்து பாதுகாத்தது பாஜக!- ஹெச்.ராஜா
பாஜகவின் பருத்தி கோடவுன்ல வச்சுத்தானே?
கடைநிலை ஊழியன்
உங்க லக் எப்படி.. ?
நா என்னைக்கு மறந்து போய் குடை எடுத்துட்டு வரலையோ.. அன்னைக்கு தான் மழை பெய்யும்..
டீ இன்னும் வரலை
பேப்பர் தீர்ந்து போன
சாதாரண காலண்டர் அட்டையே சில நேரம் “கடவுளா” மாறும் போது…
நாம மனசு வச்சா என்னவா வேணும் ஆகலாம்…
கடைநிலை ஊழியன்
உங்க லக் எப்படி.. ?
நா என்னைக்கு மறந்து போய் குடை எடுத்துட்டு வரலையோ.. அன்னைக்கு தான் மழை பெய்யும்..
ℳsd ❝இதயவன்❞
கமல்ஹாசன் காங்கிரசில் சேர்வதா?, திமுகவில் சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்~ அண்ணாமலை
பாத யாத்திரையில் அரசியல் பேச மாட்டேன் னு சொன்ன வாய் தான இது ?!
Mannar & company™
டூத் பேஸ்ட்டை பிதுக்க ஆரம்பிக்கும்போது தான் வீரன் உணர்ந்தான் இது மாசக்கடைசி என்பதை!
காங்கேயன்
லியோ ஆடியோ லாஞ்ச்க்கு 1லட்சம் பேர் வரை டிக்கெட் கேட்டதுனால ஆடியோ லாஞ்ச் நடத்த முடியல ~Leo Team
~அட பாவிகளா விஜய் பட ஆடியோ லாஞ்ச ஸ்கூல் லீவ் இல்லாத நாள்ல வச்சா 2000 – 3000 பேர்தான் வந்திருப்பானுங்க. இந்த ஐடியாவே இல்லாத பயலுகளா இருக்கிங்களேடா
balebalu
மைக்கை நீட்டி சீமான் , அண்ணாமலை முன் பேட்டி எடுப்பவர்கள் நிலை ரன் பட விவேக் மாதிரி ஆகிட்டது
வீட்டுல திட்டுனா எப்படி எடுத்துப்பாங்களோ தெரியாது ஆனா பாவம் இப்போ தினம் தினம் பொது வெளியில் அத்தனை திட்டு வாங்குறாங்க
ச ப் பா ணி
தற்பெருமை பேசுவோருடமிருந்து தப்பிக்க போனை எடுத்துப் பார்ப்பதே skip add என்று அறிக
லாக் ஆப்
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி முடித்த டீல்… அதிமுக-பாஜக அடக்கி வாசிக்கும் மர்மம்!
செவ்வாய் கிரகம் வரை செல்லும் AI…. நாசாவின் புதிய அறிவிப்பு!