இன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வழக்கமா டீ குடிக்கிற கடைக்கு நானும் என்னோட நண்பரும் போனோம்…
அங்க டிவில முதல்வர் கொடைக்கானலுக்கு போயிருக்கிறதா நியூஸ் ஓடிட்டு இருந்துச்சு…
சரி நம்மளும் ஊட்டி, கொடைக்கானல் போவோமானு என் கூட வந்தவர்கிட்ட பேசிட்டு இருந்தேன், அப்போ, ஊட்டில வழக்கத்த விட இன்னிக்கு 5 டிகிரி செல்சியல் கூடுதல் வெயில் அடிச்சதுனு நியூஸ் ஓடுது…
அடிக்கிற வெயிலுக்கு ஊட்டிக்கு போக கூட பயமாதான்யா இருக்குனு பேசிக்கிட்டே…. குடிச்ச டீக்கு காச கொடுத்துட்டு வந்துட்டோம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
வீட்டுப்பாத்திரம் கழுவுறது கஷ்டமா இருக்கு மாமா!
தினம் கழுவுறதுதான மாப்ள?
இத்தனை நாள் ஏதாவது ஒரு வேட்பாளர் வந்து கழுவிக்கொடுத்துக்கிட்டு இருந்தார் மாமா!
வசந்த்
விரல்ல தான் மை இருக்கே நீ எதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுற?
ஒரே ஒரு ஓட்டு தான் போட முடிஞ்சுது.
mohanram.ko
வெயில் காலத்தில் மட்டும் , பாலியஸ்டர் ஆடைகள்னு ‘குத்தி’ காட்டுது
ArulrajArun
தட் வெயில்; குளிச்சிட்டு இருக்கும் போதே வேர்க்குது ன்னு தானே புலம்புற இரு மே மாசம் வரட்டும் வேர்வையில நீ குளிக்கவே போற
ச ப் பா ணி
நடுரோட்ல சூட்கேஸ் கிடந்தா திறந்து பார்க்க பயப்படுற மாதிரிதான்..
ஆன்லைன் லிங்க் வந்தால் ஓபன் செய்து பார்க்காத மனநிலையும்
கடைநிலை ஊழியன்
காலம் கடந்து போகும்.. கவலை படாதீங்க..
டேய்.. முதல்ல இந்த வெயில் காலம் மட்டும் கடந்து போனா போதும் டா…
ச ப் பா ணி
என்ன பெருசா வச்சிருக்கென்னு.. ப்ரஃபைல் லாக் செய்து வச்சிக்கிட்டு Friend request கொடுக்கிற.
இருக்கிறது ஒரே ஒரு ப்ரஃபைல் பிக்சர்.. படுவா
#fb அலப்பறைகள்
Kirachand
ரூ.75 லட்சம் போச்சு மாமா?
என்ன மாப்ள…பறக்கும் படை பிடிச்சிட்டாங்களா?
இல்ல மாமா… சின்ன புள்ளைல செஸ் விளையாட பழகாம
… தெருவில கோலிக்குண்டு விளையாடி தொலச்சிட்டேன்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்