மலைக்கு வந்த பிரேக்கப் லெட்டர்: அப்டேட் குமாரு!
இன்னைக்கு சாய்ந்தரம் டீ குடிக்கப் போற நேரத்துல, அண்ணா பத்தி தப்பா பேசுனதால, மலையும் வேண்டாம், அந்த கூட்டணி மாலையும் வேண்டாம்னு அதிமுக தரப்பு அறிவிச்சாட்டங்க…
எதிர்பார்த்தது தான்… ஆனா இதுக்கெல்லாம் காரணமான பாஜக தலைமை என்ன ரியாக்சன் கொடுக்கும்னு யோசிச்சிட்டு இருந்தப்போ,
யாத்திரை போய்க்கிட்டு இருந்த தலைமைகிட்டயே இதபத்தி பத்திரிகையாளர்கள் கேட்டாங்க….
அதுக்கு அவரு, ’யாத்திரையில் அரசியல் பேச விரும்பல’ன்னு சொல்லிட்டு அந்த பக்கமே திரும்பி பாக்காம நடந்து போய்ட்டாரு..
யாத்திரையே நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக தான்… இது அரசியல் கிடையாதா? இல்ல பழனி யாத்திர ஏதும் போறாரா? குழப்பமா இருக்கே….
சரி நீங்க ஜாலியா அப்டேட்ஸ் பாருங்க….
மயக்குநன்
பிரதமர் மோடியின் நாடாளுமன்ற வருகைப்பதிவு 0.001 சதவீதம்!- செய்தி.
என்ன ஒரு ‘அவுட் ஸ்டேண்டிங்’ பர்ஃபார்மென்ஸ்..?!
சரவணன். ????
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக!
தொண்டர்கள் ~ எங்களை இன்னும் பைத்தியக்காரங்கன்னே நெனைச்சுக்கிட்டு இருக்கீங்கல்ல..
black cat 2
அலோ அமித் ஜீ… மே பன்னீர் பாத் கருங்…. ஆப் கெய்சே ஹோ….? இப்போ கூட ஒன்னும் கெட்டு போலே இரட்டை இலை என்கு குடுங்க ஜி நா alliance வரேன்
கடைநிலை ஊழியன்
நாட்டு மக்கள் அனைவரும் பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி அழைப்பு
தேர்தல்.. தேர்தல்.. தேர்தல்..
balebalu
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க ?
போன தடவை கொச்சி வழியா ரகசியமா டெல்லி போனாங்களே
இந்த தடவை எந்த ரூட்டுல
டெல்லி போக போறாங்கன்னு கேக்குறாம்ப்பா
கோழியின் கிறுக்கல்
இறந்தவரிடத்தில் வாங்கிய கடனை தேடி வந்து திரும்ப தரும் போது,
ஊசலாடிக் கொண்டிருக்கும் நேர்மைக்கு ஒருவர் நீர் ஊற்றி போகின்றார்!!
மயக்குநன்
விஜய்- ஷாருக்கானை வைத்து ஒரு படம் நிச்சயம்!- அட்லீ.
அந்தப் படத்துக்கு உள்ளே எத்தனை படம் இருக்கும்னு சொல்லுங்க..?!
நெல்லை அண்ணாச்சி
திமுக அரசு விளம்பரம் செய்வதில் தான் கவனம் செலுத்துகிறது… பாஜக…!!!
எல்லாம் தங்களிடம் கற்ற”ஞானப்பால் ” தான் அரசே..!!
ரஹீம் கஸ்ஸாலி
அதிமுக- பாஜக உறவு முறிந்தது. இதை ப்ரேக்கிங் நியூஸ் என்று போடுவதா… ப்ரேக்கப் நியூஸ் என்று போடுவதா?…
கடைநிலை ஊழியன்
பாஜகவுடன் கூட்டணி இல்லை – அதிமுக அதிகாரப்பூர்வ முடிவு
அதிமுக தலைமை – நாங்க சொன்னது இந்த மாசம்.. அடுத்த மாசம் திரும்பவும் முடிவ மாத்துவோம்..
லாக் ஆஃப்
எடப்பாடிக்கு அந்த தைரியம் கிடையாது : ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!