இன்னைக்கு டீக்கடைக்கு போனப்போ, ‘இப்போலாம் சரியா வருமானம் இல்ல… வீட்டுல பொண்டாட்டி மதிக்க மாட்டேங்குறா’னு உசிலமணி புலம்பிட்டு இருந்தான்.
அத கேட்ட பெருசு ஒன்னு, “நீ உன் வீட்டுல நடக்குறத சொல்ற… நம்ம நாட்டுல என்ன நடக்குனு தெரியுமா? ஒருகாலத்துல இந்த வருமான வரித்துறை ஆபிசருங்க.. யாருகிட்ட அதிகமா பணம் இருக்கோ, அவங்கள தேடி தேடி போயி பிடிப்பாங்க… அவங்களும் ஒன்னு ஜெயிலுக்கு இல்லனா நாடு விட்டு நாடுனு எஸ்கேப் ஆயிருனுவானுங்க.
ஆனா இன்னைக்கு 4 கோடி வசமா சிக்குனாலும் அங்க போயி சோதன போடமா… எசமான் சொல்றானு அது நெசமானு கூட தெரிஞ்சிக்காம பானைக்குள்ள தலைய விட்டு தேடிட்டு இருக்கானுங்க…
பெட்டில தேடுனா பணம் கெடைக்கும்… வெறும் பானைக்குள்ள தேடுனா எப்படி கெடைக்கும்?னு” டீய விட சூடா பேசுனாரு.
இத கேட்ட உசிலமணி… ”பரவால்ல… நாட்டுல வருமான வரித்துறைய விட, வீட்டுல நமக்கு கெடக்குற மரியாத கொஞ்சம் தேவல’னு சொல்லிட்டு கெளம்பிட்டான்..
நீங்க அப்டேட்ஸ் பாருங்க….
நெல்லை அண்ணாச்சி
சென்னை Road Show
” நெஞ்சிருக்கும் வரை ” நினைவிருக்கும்…. மோடிஜி
#அவ்வளவு கூட்டமா…ஜி…???
…ஆட்களே…இல்லை..!!!!
ArulrajArun
“ஒரு இன்ச் நிலத்தைக்கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை” -ஒன்றிய அமைச்சர் அமித்ஷா
# ஆமா ஆமா எல்லாம் அடி கணக்குல தான் ஆக்கிரமிக்க முடியும் சீனாவால்
பர்வீன் யூனுஸ்
முதலில் உட்கார இடம் வேண்டும். பிறகு நிற்கலாம் என்பதால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை – கமல்ஹாசன் # இப்பல்லாம் கொஞ்சம் புரியிற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டீங்க ஆண்டவரே!
Mannar & company
நாளைக்கு எல்லா “பாய்”ஸ்ஸும் நமக்கு பிரியாணி குடுப்பாங்கல்லடா ??
எப்பிடி நீ கிருஸ்துமஸ்க்கும் தீபாவளிக்கும் அவங்களுக்கு குடுத்தியே அந்த மாதிரியா?!
பர்வீன் யூனுஸ்
அரசியல் மீதும், அரசியல் பரப்புரை மீதும் மக்களிடம் விருப்பம் குறைந்துவிட்டது – கார்த்தி சிதம்பரம் # உங்கள மாதிரி ஓடிடி சீரீஸ்களை விரும்ப ஆரம்பிச்சிட்டாங்களா?
balebalu
கைது பண்ணியாச்சு மாமா
சபாஷ் மாப்ள கோடி கணக்குல பணம் எடுத்து கிட்டு போணவங்களைத்தானே
இல்ல கிளி ஜோசியக்காரரை மாமா
Sivakumar
Ji: ஏன் ரோட்ஷோ நடத்த திநகர் சூஸ் பண்ணிங்கோ
அங்கதான் ஜீ ஷாப்பிங் வர்ற கூட்டத்த நம்ம கூட்டமா காமிக்கலாம்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்?: ஸ்டாலின் கேள்வி!
வெள்ள பாதிப்புகளை களைய முன்னுரிமை : சென்னையில் மோடி ரோடுஷோ!
Dmk jalra