2வது இடம் வந்துட்டேன் பாத்தியா? : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சி வீட்டுக்கு போகும்போது தங்கச்சி பையன் வீட்டுக்கு வந்திருந்தான். என்ன பாத்ததும், ‘மாமா நீ சொன்னா மாதிரியே நான் ரேஸ்ல 2வது இடம் பிடிச்சிட்டேன். எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடு’னு கேட்டான்.

இதுக்கு வாய்ப்பில்லையேனு ’எத்தன பேரு போட்டில கலந்துகிட்டாங்க?’னு கேட்டேன்… அதுக்கு ’2 பேரு தா’னு சொல்லி சிரிக்குறான்.

இத கேட்டதும்,  கேரளா சிஎம் பினராயி விஜயன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வந்துச்சி… அவருகிட்ட, “இந்தியா கூட்டணியில் இருந்தும் கேரளாவுல காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் தனித்தனியே ஏன் போட்டியிடுறீங்க?”னு கேட்டதுக்கு,

அதுக்கு பினராயி, ”நாங்க ஒன்னா தேர்தல சந்திச்சோம்னா, இந்த பாஜக நாங்க 2ம் இடம் வந்துட்டோம்னு  சொல்லிக்குவாங்க, அதனால தான் நாங்க தனித்தனியா போட்டியிடுறோம்னு சொல்லியிருக்காரு..

என்ன ஒரு புத்திசாலித்தனம்!

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko
ஓபிஎஸ் – சின்னதா சின்னம் கொடுத்து இருந்தா கூட பரவாயில்லை தம்பி, இந்த வயசான காலத்துல பலாப்பழத்தை தூக்க சொல்றாங்க,

கடைநிலை ஊழியன்
தம்பி“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” – நயினார் நாகேந்திரன் #
இத தான் சொல்லுவீங்க னு தெரியும் சாரே

பர்வீன் யூனுஸ்
ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்றால் அடுத்த 24 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும் – மாணிக் தாகூர் # அப்ப..2026 தேர்தலில் உதயநிதி செங்கலை காட்டி பிரச்சாரம் செய்ய முடியாதா?

கடைநிலை ஊழியன்
வேட்பாளர் ஓட்டு கேட்க வராங்க.. எல்லாரும் தோசை மாவு, பூரி மாவு, இஸ்திரி போட துவைச்ச துணி எல்லாத்தையும் ரெடியா வைங்க..

balebalu
விழி அசைவில் வாழ்க்கையின் தலையெழுத்து -காதல்
விரல் அசைவில் நாட்டின் தலையெழுத்து -தேர்தல்

ச ப் பா ணி
காலையில் எழுந்து பால் வாங்கப் போறவன் மனுஷன்
ஷட்டில் ஆடப் போறவன் செட்டில் ஆன பெரிய மனுஷன்

செங்காந்தள்
“ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் வரவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்” -பிரதமர் மோடி
இவர் மணிப்பூர் பக்கம் கூட எட்டிப் பார்க்காதவர் என்பதை மறந்து விடாதீர்கள் -ராமர்

மயக்குநன்
கச்சத்தீவை காங்கிரஸ், திமுக சேர்ந்துதான் இலங்கைக்கு கொடுத்துள்ளது!- குஷ்பு.
அது தெரியப்போய்தான் ரெண்டு கட்சியில் இருந்தும் விலகி பாஜகவில் சேர்ந்தீங்களாக்கும்..?!

வசந்த்
அண்ணாமலைக்கு ஆதரவாக நடனமாடி வாக்கு சேகரித்த கலா மாஸ்டர்.
அரவக்குறிச்சி ரிசல்ட் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா..

மயக்குநன்
இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்!- கங்கனா ரணாவத்.
அப்படியே… தற்போதைய பிரதமர் ‘யோகி ஆதித்யநாத்’னு சொல்லிட வேண்டியதானே..?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி… பெருமூச்சு விட்ட ஹர்திக் பாண்டியா

டிஜிட்டல் திண்ணை: சிக்கிய 4 கோடி, நயினாரை போட்டுக் கொடுத்தது யார்? நெல்லை தேர்தல் நிறுத்தப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share