நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
ராதிகா சரத்குமார் மடியேந்தி வாக்கு சேகரிப்பு!
மடியேந்தி வாக்கு சேகரிப்பேன்னு எந்த அம்மனுக்கு வேண்டுதல் வச்சிருக்கீங்கண்ணே?
வசந்த்
“எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியுடன் இல்லை” -அண்ணாமலை
ஆமா….நோட்டாவுடன் தான் எங்க போட்டியே.
Kirachand
கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடி செய்யும் பாஜக அரசு! – முதல்வர் ஸ்டாலின்
அந்த ஒரு வாழைப்பழம் கூட கொடுக்காத பாஜக அரசுன்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்குமோ?
ℳsd இதயவன்
சொந்தமாக கார் – வீடு இல்லை ராகுல் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தகவல் ~
டிடிவி.தினகரனை விட ஏழை போல இவரு ?!
பர்வீன் யூனுஸ்
தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என யார் வந்தாலும் மாப்பிள்ளை அதிமுகதான்- செல்லூர்ராஜு
# ஆனா அதிமுக போட்டிருக்கிற சட்டை மோடி அமித்ஷாவோடதா
mohanram.ko
என்னடா இது, டீ சூடாகவே இல்லை
ஒரு 10 நிமிஷம் அப்படியே வச்சிருந்து குடி… சூடாகிடும்.. என்னா வெயிலு…
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
இல்லத்தையும் உள்ளத்தையும் அப்பப்ப சுத்தம் பண்ணனும்.
இல்லன்னா சேர்த்து வைத்து கஷ்ட படனும்!!
தத்துவம்
மயக்குநன்
எனக்காக முதல்வர் எடுத்த முயற்சிகள் ‘சாதாரணமானவை’ அல்ல!- அமைச்சர் பொன்முடி.
ஆமா தலைவரே… ‘சதா ரணமானவை’..!
கோழியின் கிறுக்கல்!
திருமண வாழ்க்கை சுருக்கெழுத்து போட்டி போலத்தான்,
நீங்க நினைத்த சொற்களை நிரப்ப முடியாது, வீட்டம்மா எப்படி எதிர்பாக்கிறாங்களோ அப்படி தான் நிரப்ப முடியும்!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் ரெய்டு!
மோடி ரோடுஷோவில் மாணவர்கள் : போலீஸ் பதிலளிக்க உத்தரவு!