சாயந்தரம் டீ குடிக்கிறப்ப, கடை வாசல்ல தொங்குற பேப்பர் போஸ்டர்ஸை பாத்து வாய் விட்டு படிக்கிறது எனக்கு ஒரு அலாதி சுகம். அப்படித்தான் இன்னிக்கு, ‘சின்ன பிரச்சினை ஓபிஎஸ் சுக்கு கோர்ட் நோட்டீஸ்’னு போட்டிருந்ததை படிச்சேன். அப்ப நம்ம மாஸ்டர், ‘ஏண்ணே… சின்ன பிரச்சினைக்கெல்லாம் எதுக்குண்ணே கோர்ட்டுக்குப் போறாங்க. இப்படி சின்னச் சின்ன பிரச்சினைக்கெல்லாம் கேஸ் கொடுக்குறதாலதான் லட்சக்கணக்குல கோர்ட்ல கேஸ் தேங்கி நிக்கிது’னு டீயை ஒரு ஆத்து ஆத்துனாரு. அப்பா சாமி… கொசுக் கடி தாங்க முடியாமதான் இங்க வந்தேன்….நீயும் கடிக்கிறியானு கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
ஷேக்பரித்
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்னையா? நாங்க யாராவது அப்படி சொன்னமா?” – செல்லூர் ராஜூ
அமலாக்க துறை லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா…
நெல்லை அண்ணாச்சி
மகளிர் இடஒதுக்கீடு் ” 2029 “க்கு பிறகே ..அமித்ஷா
இதுக்குதான் இவ்ளோ – அலப்பறையா….பெருசு..!!!
ℳsd ❝இதயவன்❞
“அதிமுக – பாஜக கூட்டணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை” – செல்லூர் ராஜு
ஆமா ஆமா பிரச்சனைக்குள்ள தான் கூட்டணியே ?!
balebalu
நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது – பிரதமர்
ஆமா , Zero Percentile வாங்கினவங்க எல்லாம் டாக்டர் ஆக போறாங்க
ஒரே கும்மாளம் தான்
கோழியின் கிறுக்கல்!!
பிறந்த நாளைக்கு treat தருவானாம்,
ஆனா புரட்டாசிங்கிறதால சைவம் தான் தருவானாம்!!
நண்பன் அட்ராசீட்டிஸ்!!
ஷேக்பரித்
புதிய நாடாளுமன்றத்துக்குள்ள போகனும்னா ஜனாதிபதியாகவோ அரசியல்வாதியாகவோ இருக்கனும் அப்படி தான.
அதான் இல்ல நடிகையா இருக்கனும்..
dum dum dum pic.twitter.com/brcUdprTz9
— kavi (@Kaviit7P) September 21, 2023
Hamru 2.0
நான் ஆக்ரோஷமாக தான் அரசியல் செய்வேன் – அண்ணாமலை
நீ ஆக்ரோஷமா அரசியல் செய்ய எங்க எடப்பாடி அய்யா தான் கெடச்சாரா..?
லாக் ஆப்
டிஜிட்டல் திண்ணை: மௌனம் கலைத்த அண்ணாமலை- எடப்பாடி ரியாக்ஷன்! சமரச தூதர் வாசன்
அதிமுக – பாஜக… பிரச்சனை என்று கூறினோமா?: செல்லூர் ராஜூ