பலாப்பழமே பதறுது : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

வேலூர்ல போட்டியிடுற மன்சூர் அலிகானுக்கும், ராமநாதபுரத்துல போட்டியிடுற ஓபிஎஸ்-க்கும் பலாப்பழத்தை தேர்தல் சின்னமா கொடுத்துருக்காங்க.

இத கேள்வி பட்டதும் இந்த ரெண்டு ஊர் பலாப்பழமும் பேசிக்கிட்டா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை வந்துச்சி…

ராமநாதபுரம் பலா : ஹே வேலூர் பலா… நல்லா இருக்கியா… இனிமே அடுத்த 20 நாளைக்கு நம்ம ராஜ்ஜியம் தான்.. இத பயன்படுத்தி நாம தான் மவுசுனு அந்த மாம்பழம், வாழைக்கிட்ட கெத்து காட்டனும்.

வேலூர் பலா : அட நீ வேறப்பா… நீ சொகுசா ஓபிஎஸ் கையில் மாட்டிக்கிட்ட… அவரு உன்ன வச்சி அதிகபட்சமா தியானம் தான் பன்னுவாரு…

ஆனா நா மாட்டிருக்கிற ஆளு யாரு தெரியும்ல மன்சூரு… அவருக்கு சாதாரன தக்காளி கெடச்சாவே பிதுக்கி எடுத்துருவாரு… இப்போ நா கெடச்சிருக்கேன்… என்னென்ன குறளி வித்தலாம் என்னய வச்சி காட்டப் போறோரா? அதெல்லாம் நெனச்சா இப்போவே பயமா இருக்கு! நா கெளம்புறேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

amudu
சமூக நீதிக்காக போராடிவரும் ஒரே கட்சி பாமக தான். -டாக்டர் ராமதாஸ்.
ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் கட்சின்னும் சொல்லலாம்.

செங்காந்தள்
என் சின்னத்தை நீங்க எல்லோரும் ஓட்டலாம் ~ ஜி.கே.வாசன் அய்யா
நாங்கள் ‘ஓட்டிக்’ கொண்டு தான் உள்ளோம் ஐயா.

amudu
டெபிட் காா்ட் கட்டணங்களை
உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி.
தேர்தல் பத்திர விபரங்களை நீதிமன்றத்தில் கொடுக்க ரொம்ப செலவு ஆகியிருக்குமோ.!?

ச ப் பா ணி
வீக் எண்ட்ல வெளியே போறீங்களானு மனைவி கேட்பது.. துணி ஊறவைப்பதற்கான அட்வான்ஸ் அலர்ட்

mohanram.ko
‘காலில் விழுவது தவறில்லை’ன்னு சொல்லிட்டு ஏன் ணே அழறீங்க
‘என் காலில் விழுந்தது சுத்தியல்’ டா

ArulrajArun
தமிழ்நாட்டில் பாஜக 20 சீட்டுகளை பிடிக்கும் – பிரசாந் கிஷோர்
# எது எங்க ஊருக்கு வரும் கடைசி டவுன் Bus la ya

பர்வீன் யூனுஸ்
உதயநிதி செங்கலை காட்டினால் போதுமா..நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஏன் செங்கலை காட்டவில்லை? – எடப்பாடி -ஒரு செங்கல் தானே இருக்கு..38 செங்கலுக்கு எங்கே போவாங்க?

ச ப் பா ணி
ஓட்டுக்கேட்டு வந்தப்ப பார்த்த கவுன்சிலரை இப்பதான் பார்க்கிறேன்
#தேர்தல் பிரச்சாரமே ஒரு get together மாதிரி தான் போல

கோழியின் கிறுக்கல்!
முப்பது வயதிற்கு மேல் கிடைக்கும் நட்பை,
ஏனோ ஒருமையில் அழைக்க முடிவதில்லை!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆப்

சரியா ஒரு வருஷம் ஆச்சு… நானி கொடுத்த சூப்பர் அப்டேட்!

’போற போக்கில் உதவி செய்தவர்’ : டேனியல் பாலாஜி குறித்து பெண் இயக்குநர் உருக்கம்!