கோயம்புத்தூரோட வெப்பநிலையை ரெண்டு டிகிரி… நாலு டிகிரி ஏத்தி விட்டுட்டாங்க அப்படின்னு நம்ம அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில சொல்லி இருக்காரு. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால கூட டெல்லி லக் கடுமையா காற்று மாசு உண்டாக்குன குற்றத்தில தான் கைது பண்ணி இருக்கோம்னு கூட அண்ணாமல சொல்லுவாரு போல… அப்படின்னு கோயம்புத்தூர் நண்பரு குமுறிக்கிட்டு இருக்காரு.
நான் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வரேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
தேர்தல் முடிந்ததும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது மோடி நடவடிக்கை எடுப்பார்! – டிடிவி தினகரன்
ஏன், இப்ப அவங்கெல்லாம் பாஜகவுக்காக தேர்தல் வேலை பார்த்துகிட்டு இருக்காங்களோ?
நெல்லை அண்ணாச்சி
ராமநாதபுரத்தில்,
ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் ” 5 வேட்பாளர்கள் ”
சுயேச்சை சின்னத்தில் போட்டி
-எனக்கு மட்டும் ..ஏண்டா இப்படி.!!!…original ஓபிஎஸ்
balebalu
ஓ பி எஸ் க்கு எதிராக இன்னொரு ஓ பி எஸ் – செய்தி
அப்ப அவரை எதிர்த்து வேற தர்மயுத்தம் செய்யணுமே
mohanram.ko
கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம்,..
…அண்ணாமலை
இப்ப இவரு வந்து பிரச்சாரம் பண்ணதுல இருந்து, ஊரே ஜில்லுனு ஆகிப்போச்சி… கோவையை இன்னொரு சிம்லா னு சொல்றாங்க.
வசந்த்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பிரசாரத்தில் பயன்படுத்துவேன்..!’ – நயினார் நாகேந்திரன்
ஓபிஎஸ் ~ தினமும் ரெண்டு நேரம் ஜெயலலிதா ஆவியோட பேசிட்டு இருக்க என்னையவே கட்சி கொடி, அம்மா படத்தை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க போவியா…
amudu
கோவையில் 2 டிகிரி வெப்பநிலை திராவிட கட்சிகளால் அதிகரித்திருக்கிறது. -அண்ணாமலை.
“சூரியன்” வெப்பத்தை மறைக்க, “இலை”யின் துணையில்லாமல் “தாமரை” கருகிடாமல் பார்த்துக்கங்க ஆபீஸர்.
balebalu
‘கோட்டா’ ல வந்தீங்களோ இல்லையோ
‘நோட்டா’ ல வந்துடாதீங்க
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என் பொதுவாழ்வில் முதல் கைது இஸ்லாமியர்களுக்காகத்தான்…. -கதிர் ஆனந்துக்காக உதயநிதி பிரச்சாரம்!
“நான் பல்ல காட்டுறேன்… நீங்க என்னத்த காட்டுறீங்க” : உதயநிதிக்கு எடப்பாடி கேள்வி!