இந்த தடவையும் உதயநிதி ஸ்டாலின் செங்கல தூக்கி தன்னோட பிரச்சாரத்த ஸ்டார்ட் பண்ணியிருக்காரு. நேத்து திருச்சியில பேசுன எடப்பாடி, “இன்னும் எத்தனை நாளைக்கு தான் செங்கல தூக்குவிங்க… ஸ்கிரிப்ட மாத்துங்க உதயநிதின்னு” சொல்லியிருக்காரு…
அதுக்கு இன்னைக்கு கவுண்ட்டர் கொடுத்த உதயநிதி, “நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டுனேன்…ஆனா இங்கே ஒருத்தர் பல்லை காட்டிட்டு இருக்காரு பாருங்கன்னு”…எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுல எடப்பாடி பழனிசாமி மோடியோட இருக்குற போட்டோவ காட்டியிருக்காரு…
நாளைக்கு இதுக்கு எடப்பாடி என்ன கவுண்ட்டர் கொடுக்க போறாரோ… எலெக்ஷன் பிரச்சாரம் நாளுக்கு நாள் எண்டர்டெயின்மெண்ட்டா தான் போய்க்கிட்டு இருக்கு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம்!
மணிப்பூர் எரிஞ்சிக்கிட்டு இருக்கே…அதுக்கு யாரு காரணம் அண்ணே?
வசந்த்
சௌமியா அன்புமணி
தேங்காய் உடைத்து.. வேட்பு மனுதாக்கல்..
மாங்காய் தான உடைக்கணும்.
mohanram.ko
என்னடா இது, ஃப்ரிட்ஜில் இருக்குற பால் இவ்வளவு சூடா இருக்கு…
திராவிட கட்சிங்க ஆட்சி செய்தா அப்படித்தான் ணே இருக்கும்
வசந்த்
“ஒரு சொட்டு சாராயம் இருக்க கூடாது”.. மும்மூர்த்திகளும் என் எதிரில் வந்து நின்று என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் இதை தான் கேட்பேன் – ராமதாஸ்
மும்மூர்த்திகள்னா?
மோடி, அமித்ஷா, யோகி
ℳsd இதயவன்
செத்தாலும் எங்க சின்னத்தில் தான் போட்டி~ துரை வைகோ கண்ணீர் மல்க பேச்சு..!!!
செத்ததுக்கு அப்புறம் நாமளே அமைதியின் சின்னம் ஆகிருவோமே?!
படிக்காதவன்
சூர்யவம்சத்தில் கலெக்டர் ஆக்கினேன்
அதேமாதிரி ராதிகாவை எம்.பி.ஆக்குவேன் – சரத்குமார் பிரத்யேக பேட்டி
அதேபடத்துல உதாவாக்கரைன்னு உங்களை சொன்னதும் சரிதான் போல…
மயக்குநன்
ஊழல்களில் குவித்த பணத்தை காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம்!- ஜே.பி.நட்டா.
பாஜக மட்டும் பணத்தை ‘பத்திரமா’ வெச்சுக்கும் போல..?!
கடைநிலை ஊழியன்
குளு குளு கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம் – அண்ணாமலை #
ஒரு நாள் வெயில்ல ஓட்டு கேட்டதுக்கே என்னென்ன சொல்றாரு பாருங்க..
மயக்குநன்
ஆளுநர் பதவியைத் துறந்ததில் 1% கூட வருத்தம் இல்லை!- தமிழிசை.
மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு 99% சந்தோஷமாம் மேடம்..
கோழியின் கிறுக்கல்
கடும் வெயிலால் இந்த வருடம் பங்குனி உத்திரம் இல்லை,
பங்குனி “உக்கிரம்”!!
Kirachand
பக்கபலமாக சின்ராசு… பஞ்சாயத்துக்கு நாட்டாமை..- ராதிகா
தலைவலிக்கு அண்ணாமலையா?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
“பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்” : நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம்!
காங்கிரஸ் விளவங்கோடு வேட்பாளர்: யார் இந்த தாரகை?