தேடிக்கிட்டே இருக்கேன் அவங்க யாருன்னு தெரியலையே அப்படினு செல்போனுக்குள்ள ரெண்டு கண்ணையும் வச்சு பேசிகிட்டு இருந்தாங்க தோழி. யாருமா அந்த மூணு பேருனு கேட்டேன். 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் மூணு பேர் எதிர்த்து ஓட்டு போட்டு இருக்காங்க. அவங்களத்தான் தேடிட்டு இருக்கேன்னு தோழி சொன்னதும்… இந்நேரம் அவங்கள அவங்க வீட்டிலேயே தேடிட்டு இருப்பாங்க… அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்கன்னு சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன். நீங்க அப்டேட்ஸ் பாருங்க
நெல்லை அண்ணாச்சி!
புதிய நாடாளுமன்ற நிகழ்ச்சிகளுக்கு
குடியரசு தலைவருக்கு
அழைப்பு இல்லை…!!!
# சனாதனம்….” agmark ”
ℳsd ❝இதயவன்❞
மோடி மீண்டும் பிரதமராக மக்கள் விரும்புகின்றனர்” – ஆர்.பி.உதயகுமார்
நேத்து கூட்டணி இல்ல
இன்று மோடி பிரதமராக மக்கள் விரும்புகிறார்கள்
நாளை எடப்பாடியை பிரதமர் ஆக்குவோம்?!
குருநாதா
“என்ன சார் கடை பக்கம் ஆளே பாக்க முடியல” எனும் விசாரிப்பின் முன்,
ஆன்லைன் பர்சேஸ் கள்
தோற்றுப் போகின்றன…!!!
Mannar & company
என்ன காக்கா கத்துற சத்தம் சேவல் கூவற மாதிரியே கேட்குது
ஓ இது புரட்டாசி மாசம்ல..
#புரட்டாசி
சரவணன். 𝓜
பாஜக கூட்டணி குறித்து கருத்து கூறவேண்டாம் – அதிமுக
அடேய் இப்ப வரைக்கும் அப்படித்தான்டா இருக்கீங்க?
கடைநிலை ஊழியன்
அழுக்கான கார் கண்ணாடிய பார்த்தவுடன்..
மைண்ட் – உன்னோட பெயர எழுதி பாரு..
*அதிமுக -பாஜக கூட்டணி முறிவு 😀😀… டேய் அங்கட்டு போய் விளையாடுங்கடா Moment*#Admkwedsbjp@EPSTamilNadu @annamalai_k pic.twitter.com/f42UpfmR7F
— Iyya venkatesan 🖤❤️ (@IyyaVenkatesan) September 20, 2023
mohanram.ko
மகளீர் மசோதாவை நிறைவேற்ற கடவுள் என்னை தான் தேர்ந்தெடுத்துள்ளார்~மோடி
தொகுதி மக்கள்-தேர்ந்து எடுத்ததே நாங்க தான்யா
balebalu
இனி மெடிக்கல் கலந்தாய்வில் :
Zero Percentile தான் வாங்கியிருக்கேன் ஏதாவது சீட் இருக்கா ?
ஐயோ கவலையே படாதீங்க
நீட் ன்னு ஒன்னு எழுதி இருந்தா போதும்
நாங்க கூப்ட்டு வெச்சு சீட் கொடுத்துடுவோம்.
ச ப் பா ணி
மேனேஜர் மெடிக்கல் லீவில் போவதெல்லாம் குருபெயர்ச்சி பலனின் இனிஷியல் ஸ்டேஜ்
மயக்குநன்
திமுகவுக்கு ஜால்ரா போட்டால் வழக்கு போட மாட்டார்கள்!- ஜெயக்குமார்.
பாஜகவுக்கு ஜால்ரா போட்டா… அமலாக்கத்துறை ரெய்டு வராத மாதிரியா..?!
லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: தகர்ந்த ஜாமீன் கனவு… தளர்ந்த செந்தில் பாலாஜி- ஸ்டாலினை சூழும் நெருக்கடி!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது!