இன்னைக்கு டீ குடிக்க வந்த கமல் ரசிகர் ஒருத்தரு மஞ்சுமெல் பாய்ஸ் படத்த பாத்துட்டு வந்து ‘எங்க தலைவனோட அரும அந்த மலையாள காரனுக்கு நல்லா புரிஞ்சுருக்குயா… தலைவன் அப்போவ அப்படி பன்னிருக்காரு… அவர மாறி யாராச்சு கோலிவுட்ல… ஏன் பாலிவுட், ஹாலிவுட்ல கூட யாரும் கெடையாது’னு புகழ்ந்து பேசிட்டு இருந்தாரு…
கூட சேர்ந்த இன்னொரு ரசிகர்… ’சினிமாவுல மட்டுமா? ஏன் அரசியல்ல கூட அவர அடிச்சிக்க முடியாது’னு அலப்பற பன்னாரு…
இதெல்லாம் கேட்டுட்டு இருந்த ரஜினி ரசிகர் ஒருத்தரு… ‘அடப்பாவிகளா தமிழ்நாட்டுல மாற்றுக்கட்சி நாங்க தான்னு சொல்லி வந்த உங்க தலைவர் கமலும் அவரோட மய்யமும்… இன்னைக்கு தேர்தல ஒரு தொகுதில கூட நிக்க முடியாத அளவுக்கு தான் நெலம இருக்கு…
நீங்க என்னடான்னா டார்ச் லைட்ல பேட்டரி கழண்டு போனது கூட தெரியாம பில்டப் பண்ணிட்டு இருக்கீங்க’னு பட்டுனு சொல்லிட்டு போறாரு….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது திமுக!
எல்லாம் அந்த ‘ஆண்டவர்’ தயவு!
amudu
கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்தார் ஓபிஎஸ்!…
என்னது… உங்கள் கட்சியில் 7 பேர் இருக்காங்களா..
ச ப் பா ணி
கடுமையாக உழை. வாழ்க்கையில் முன்னேறுவாய்
டேய்..நானே மாச சம்பளகாரண்டா.. எவ்வளவு உழைச்சாலும் அதே சம்பளம்தாண்டா
Kirachand
வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு : மகளிர் தின பரிசு! – பிரதமர் மோடி
பிரிக்க முடியாதது… தேர்தலும் சலுகையும்…
ச ப் பா ணி
காங்கிரசுக்கு பத்து தொகுதி..
இனி அந்த பத்து தொகுதி கட்சியில் யார் யாருக்கு ஒதுக்குவது என்பது தான் க்ளைமேக்ஸே
கடைநிலை ஊழியன்
மீ – வெயில் ரொம்ப அடிக்குது..
வெயில் – என்னது ரொம்ப வா.. மே மாசம் மட்டும் வரட்டும்.. உக்கிரமான வெயில் ‘னா என்னனு பாப்ப…
balebalu
உழைப்புக்கேற்ற பலன் என்றைக்காவது கிடைக்கும் என்று சொன்னபோது முதலில் நம்ப முடியாமல் தான் இருந்தது
சமீபத்திய ‘கண்மணி அன்போடு பாடல் and குணா’ திரும்பவும் உலகம் முழுக்க பேசப்படும் வரை
கோழியின் கிறுக்கல்!!
Me:நைட் படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது, வேலைக்கு வந்தா தூக்கம் தூக்கமா வருது!!
My Mind: ராத்திரி கண்ணு முழிச்சு போன் பாரத்துட்டு இருந்ததால தான் நாயே காலைல தூக்கம் வருது!!
Niranjan kumar
நீதிபதி ராஜினாமா!
தேர்தல் ஆணையர் ராஜினாமா!
அடுத்து யார் ராஜினாமா?
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யமும் கடந்து வந்த பாதை!
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!