திருமா கிண்டும் தெலங்கானா குருமா: அப்டேட் குமாரு
இப்பல்லாம் டீ கடையில ஏதுங்க பேப்பர்… எல்லாமே செல்லும் கண்ணுமாதான் இருக்காங்க. இன்னிக்கு டீ குடிச்சிக்கிட்டிருந்தப்ப, நம்ம சிறுத்தை தம்பி வந்தாப்ல. ‘என்னய்யா… எத்தனை சீட்லதான் நிக்கிறீங்க?’னு கேட்டேன். ‘எங்கண்ணா… நானும் தலைவர் ஃபேஸ்புக்ல லைவ் பாத்துக்கிட்டே இருக்கேன். ஆந்திராவுல அத்தனை சீட்டு தெலங்கானாவுல இத்தனை சீட்டுனு குருமா கிண்டுறாரு. ஆனா தமிழ்நாட்ட பத்தி கேட்டா மட்டும் என்னென்னமோ சொல்றாருண்ணா…’ அப்படினு சிணுங்கிகிட்டே சொன்னாப்ல அந்த சிறுத்தை தம்பி…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
ஊழல் பணத்தை மீட்டு ” உங்களுக்கே ” கொடுப்பேன் ~மோடிஜி
# 15 லட்சம் + இது வேற… எங்கயோ போயிட்டிங்க..ஜி.!!!
ArulrajArun
வடிவேலு ; புரியாத பிரியம் பிரியும் போது புரியும்
பார்த்திபன் ; புரியாத பிரியம் பிரியும் போது புரிந்து என்ன புண்ணியம்
குருநாதா
சம்பளம் வந்ததும் ரிசைன் பண்ற எண்ணம் காணாம போயிருது
என்ன டிசைனோ தெரியல
ரஹீம் கஸ்ஸாலி
‘அம்பானி வீட்டு கல்யாணத்தை, அரசு விழா மாதிரி நடத்துறார் MOடி’ என்று ஒரு நண்பர் சொன்னார்.
‘அம்பானி வேறா? அரசு வேறா?’-ன்னு கேட்டுட்டு வந்துட்டேன்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
என்னப்பா.. சம்மர் வர்றதுக்கு முன்னமே எல்லா பக்கமும் உன் வியாபாரம் தான் போல..
அதாம்லே ‘தர்பீஸு’..????
கடைநிலை ஊழியன்
me – பேசாம வேலைய விட்டுட்டு பைக்ல லடாக் போகலாமா
also me – இருக்குற EMI எல்லாம் முடிச்சிட்டு பாப்போம்…
balebalu
இன்று போய் நாளை வா என்பது யாருக்கு பொருந்துதோ இல்லையோ
“ஸ்டேட் பேங்க்” க்கு நல்லாவே பொருந்தும்
ச ப் பா ணி
அறிவுரை தான்.. கொஞ்சம் அதிகமானால் அறுக்கிற உரையாகிடுது
Kasi காசி
முப்பது நாள் வாக்குச் சாவடி காவல் காத்தமாதிரி SBI சர்வர் ரூமுக்கு காவல் காக்கணும் போலிருக்கே…
மயக்குநன்
காங்கிரஸ் எந்த காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை!- செல்வப்பெருந்தகை.
கண்ணீர் விட்டு கதறி அழுத கதையை எல்லாம் அண்ணன்கிட்ட அழகிரி சொல்லலை போல..?!
GOVIND
யார் சார் நீங்க தினமும் பைக்ல வந்து தெருநா ய்க்கு பிஸ்கட் போடுறீங்க..?
மனிதன் மட்டும் வாழ்வதற்கு இல்ல ப்ரோ பூமி …
பைத்தியகார நாயே நீ போன பிறகு பைக்ல வர்ர போர எல்லாரையும் பிஸ்கட் போடலனு கடிச்சி வைக்குதுடா…
கோழியின் கிறுக்கல்!!
State Bankக்கு நாம் போனால் ‘Lunch time முடிஞ்சு வாங்க’ன்னு சொல்லுவாங்க,
Supreme Court கேட்டதுக்கு, ‘Election முடிஞ்சு வாங்க’ன்னு சொல்லி இருக்காங்க!!
#ElectoralBonds
balebalu
என்னடா ஒரே யோசனையா இருக்க ?
ஏற்கனவே கருப்பு பணத்தை மீட்டு அக்கௌன்ட் ல போட்ட 15 லட்சத்தையே என்ன செய்யுறது ன்னு தெரியாம முழிக்கிறோம்
இப்போ ஊழல் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுக்க போறாராம்…
அதான் அத எப்படி செலவழிக்குறதுனு யோசிச்சிட்டு இருக்கேன்ணே
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மோடியின் ஃபார்முலா இதுதானா?” : போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி!
”மேல ஏறி வாரோம்”: வசூலில் வரலாற்று சாதனை படைத்த ‘மஞ்சுமெல் பாய்ஸ்’