ஊரெல்லாம் ஆயிரம் ரூபாய் பத்தியே பேச்சா இருக்கு. இந்த சமயத்துல நம்ம கேமரா மேன் தம்பி ஆயிரம் போச்சேன்னு சோக புராணம் பாடிட்டு இருந்தாரு. என்னய்யா விஷயம்னு கேட்டேன். நேத்து டூவீலரில் போகும் போது பிரண்டுக்கு லிப்ட் கொடுத்தேன்… அவன் ஹெல்மெட் போடாததனால சிசிடிவி ல பார்த்து எனக்கு ஆயிரம் ரூபாய் பைன் போட்டு ரசீது அனுப்பிட்டாங்க அப்படின்னு புலம்பினாப்ல.
சரி, உங்க அம்மாக்கு போன் போட்டு ஆயிரம் ரூபாய் வந்திருச்சானு கேளு அப்படின்னு கேட்டேன். அந்தத் தம்பியும் அவங்க அம்மாவுக்கு போன் போட்டு பேசிட்டு ஆமா அண்ணே ஆயிரம் ரூபாய் வந்துடுச்சாம்னு சொன்னாப்ல.
சரி விடு அம்மா கிட்ட கொடுத்த காசை பையன் கிட்ட இருந்து கலெக்ட் பண்ணியாச்சு.
பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு கிளம்புனு சொல்லிட்டு நானும் கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க…
சரவணன். ????
தமிழ்நாடு அரசு மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்னு நீங்க என்ன செய்ய போறீங்க?
ஒன்றிய அரசு ~ ஆங்.. அதுக்கு ஜிஎஸ்டி போடுவோம்..
ஷிபின் Shibin
இல்லத்தரசிகளுக்கு ₹1000 பரிசு
டாஸ்மாக் விற்பனை திடீர் உயர்வு
குடித்து கொண்டாடிய கணவன்மார்கள்
கடைநிலை ஊழியன்
மச்சான் உனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன் டா..
கிழிப்ப.. call பண்ணுனா attend பண்ணுடா முதல்ல..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“பிரதமர் மட்டும் ஒரு உரையை தமிழில் நிகழ்த்தி விட்டால்… திமுக அன்றோடு காலி!” – அண்ணாமலை
# அப்படி நிகழ்த்தினா தமிழே காலி.. பேசாம போவியா..?
ச ப் பா ணி
அண்ணாவைப் பற்றிப் பேசினால் நாக்கைத் துண்டாக்கும் தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர்” – செல்லூர் ராஜூ
தட் லேடன்ட்ட பேசுறியா.. பின் லேடன்கிட்ட பேசுறியா மொமண்ட்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சீமானிடம் நான் பணம் வாங்கவில்லை – நடிகை விஜயலட்சுமி
வேற என்ன வாங்குனீங்க..?
மகளிர் உரிமை தொகை தான் வாங்கினேன்..
balebalu
இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமே இருக்காது – ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர்
நாளைக்கு நாமளே இருப்போமா ன்னு தெரியல்ல…இதுல …
நெல்லை அண்ணாச்சி
நம்ம கேரளாவின்
பரப்பளவு…38863 ச.கி.மீ
சீனா ஆக்கிரமிப்பு..
38000 ச.கி.மீ
லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: நாடாளுமன்றத்தில் சனாதனம்… ஸ்டாலின் போட்ட உத்தரவு!