சாயந்தரம் டீக்கடையில பேப்பர் படிச்சுக்கிட்டிருக்கும்போது, டக்குனு ஒரு பக்கத்தை எடுத்துக் காட்டின நம்ம நண்பரு, ‘இங்க பாருய்யா.. மறுபடியும் அமலாக்கத்துறை ரெய்டை ஆரம்பிச்சிட்டாங்க. பெரிய பெரிய பில்டர்ஸெல்லாம் குறிவச்சி அடிக்கிறாங்க’ அப்படின்னாரு.
நான் பேசாம டீ குடிச்சிக்கிட்டிருந்தேன்… நம்ம பக்கத்துல இருந்த ஒரு சின்னவரு அதாங்க ஒரு இளைஞரு, ‘ஏண்ணே…இனிமே அமலாக்கத்துறை ரெய்டுனு சொல்லாதீங்க. அது பிஜேபி தேர்தல் நிதி சேகரிப்புக்கான ரெய்டுனு சொல்லுங்க. இப்படிதான் ரெய்டு போயி போயி கட்சிக்கு கோடி கோடியா நிதி வாங்கிட்டாங்களாமே. இப்ப தேர்தல் நெருங்கிட்டதால கைய கடிச்சிருக்கும், அதான் ரெய்டு போயிருக்காங்க’னு சொன்னாப்ல.
டீய குடிச்சு முடிச்சுட்டு நான் வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலையை போட்டியிட வைக்க டெல்லி பரிசீலனை…!
என்னப்பா பாஜகவுக்கு வந்த சோதனை…?-
கடைநிலை ஊழியன்
எவ்ளோ வெயில் அடிச்சாலும், தலைக்கு எண்ணெய் தேய்க்காம, மொட்ட வெயில் ல போறான் பாரு..
அவன் தான் டா இளந்தாரி பய..
கோழியின் கிறுக்கல்!!
தமிழ்நாட்டில், கடவுள் மனசுக்கு, பெரியார் வாழ்க்கைக்கு!!
ச ப் பா ணி
காலையில் எழுந்து ஆன்லைன் நோட்டிபிகேசனை பார்ப்பவன் மனுஷன்
பேங்க் பேலன்சை பார்ப்பவன் பெரிய மனுஷன்
balebalu
அம்பானி வீட்டு திருமணம் ஆடம்பரமாக நடத்தப்படுவது ஆச்சர்யமில்லை
நடுத்தர வர்க்க திருமணமும் கடன் வாங்கியாவது ஆடம்பரமாக நடத்தபடுவது தான் ஆச்சர்யம்
ச ப் பா ணி
கெமிஸ்ட்ரி ஒத்துப் போனால் காதல்;
பிளாசப்பி ஒத்துப் போனால் கல்யாணம்
GOVIND
கழுத்துல ‘டை’ கட்டிகிட்டு ஸ்கூல் போக ஆரம்பிச்சு,
தலையில் ‘டை’ அடிச்சிகிட்டு வேலைக்கு போவதில் முடிகிறது வாழ்க்கை!
sync 😅😻 pic.twitter.com/wW1g6RZagR
— black cat (@Cat__offi) March 2, 2024
NFA😎AK Mafia
கேரளால ரிலீஸ் ஆகி தமிழ்நாட்டுல சக்க போடு போடுற #ManjummelBoys movie இன்னும் பாக்கலயா நீங்க…….
டேய் நான் இன்னும் பிரேமமே பாக்கலடா……..
Vivek – விவேக்
ஒருதன் பணத்து மேல Fair & Lovely தடவுனான் ஏன்?
தெர்லயே?
ஏன்னா அது கருப்பு பணமாம் அத வெள்ளை ஆக்க தடவுனானாம்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக வேட்பாளர் பட்டியல்… பிரதமர் முதல் நடிகர்கள் வரை – முக்கிய நபர்கள் யார் யார்?
மோடியோடு அரசு நிகழ்வு: மீண்டும் தவிர்க்கும் ஸ்டாலின்