டீக்கடைக்கு இன்னைக்கு சாயந்தரம் டீ குடிக்க போயிருந்தேன். அப்போம் ஒருத்தரு அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தத பத்தி பேசிக்கிட்ருந்தாப்ல… update kumaru March 1-2024
“அண்ணி… அஞ்சு லோக் சபா, 1 ராஜ்ய சபா கேக்குறாங்க…ஆனா நம்ம அண்ணே, அஞ்சு சால்வையும் மூணு பொக்கேவும் கொடுத்துட்டு வந்துட்டாருன்னு” கலாய்ச்சிட்ருந்தாப்ல.
அவங்க பேச்ச கேட்டுக்கிட்டு இருந்த கேப்புல என் டீ ஆறிப்போச்சி…இவங்க தான் வெட்டிக்கதை பேசுறாங்கன்னு நானும் அதை கேட்டுக்கிட்டு இருந்ததால, ஆறிப்போன டீயை குடிச்சிட்டு, அங்க இருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Sasikumar J
வெள்ளிக்கிழமை வந்தாலே ஆபிஸ் போகணும் அப்படின்னு தோண மாட்டேங்குது…!
அப்படியே ஆபீஸ் வந்தாலும் வேலை செய்யணும்னு சுத்தமா தோன மாட்டேங்குது…!!
அது என்ன அப்படி ஒரு வியாதின்னு தெரியல..!!
குருநாதா
‘உன்னை எண்ணிப்பார்க்கையில்
கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கயில் வார்த்தை முட்டுது’
எது இந்த கடுதாசி லெட்டர் மடல் இதுவா ?
ச ப் பா ணி
பணம் மட்டுமே நிம்மதியை தரும் விஷயங்களில் ஒன்று.. சரியான தேதியில் EMI கட்டி விடுவது தான்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பொது இடங்களில் சத்தமா பேசி சிரிக்கறவங்களை பார்க்கும் போது, மை மைன்ட் வாய்ஸ் பி லைக்:
சந்தோசமா இருக்காங்களாம்..
கோழியின் கிறுக்கல்!!
தேர்தல் காலம் தொடங்கி விட்டது!!
#BengaluruBlast
black cat 2
இது மனிதன் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல…
என்ன சொல்ல வரான் ஒன்னும் புரியலயே….
Manjummel Boys படம் பாருங்கனு சொல்லுறத தான் சுத்தி சுத்தி எழுதிருக்கான்…
Kirachand
பாஜக கூட்டணி 400 க்கு மேல் வெற்றி பெறும் என மக்களே பேசுகிறார்கள்! – மோடிஜி
யாருப்பா பேசுனா?
அங்க… தூரத்துல… நல்லா பாரு… நாலு பேரு தெரியுதா?… அவங்கெதான்…
ச ப் பா ணி update kumaru March 1-2024
மொட்டை மாடியில் பறவைக்கு தண்ணீர் வைக்கச் சொல்லி வாட்ஸ் அப்பில வர ஆரம்பிச்சா.. வெயில் காலம் வந்திடுச்சுனு அர்த்தம்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவை தேர்தல் அதிமுக விருப்பமனு: கால அவகாசம் நீட்டிப்பு!
திருமா – செல்வப்பெருந்தகை சந்திப்பு: காரணம் இதுதான்!