முப்பாட்டன் முருகன் முத்தமிழ் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

டீ குடிச்சுக்கிட்டே பேப்பரைப் பாத்த நம்ம நண்பரு,

‘இங்க பாருய்யா…. பழனியில முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப் போறதா அமைச்சர் சேகர்பாபு அறிவிச்சிருக்காரு …  எங்க அண்ணன் சீமான் முப்பாட்டன் முருகனுக்கு விழா நடத்தினப்ப கிண்டலடிச்சாங்கள்ல… இப்ப இதுக்கு என்ன பண்ணப் போறாங்க?’னு கேட்டாரு.

நானும் அதைப் பாத்துட்டு,  ‘ஏற்கனவே அவங்க அண்ணன் விநாயகர் அரசியல்ல சிக்கிட்டிருக்காரு.  இப்ப எலக்‌ஷன் நேரமா இருக்குனு  தம்பியையும் கொண்டாந்துட்டாங்களா?’னு சிரிச்சுக்கிட்டே கெளம்பிட்டேன்.

நீங்க அப்டேட் பாருங்க…

Kirachand
திருநெல்வேலி அல்வா போன்று மிகவும் இனிமையாகவும் இளகிய மனதோடும் இருப்பவர்கள் நெல்லை மக்கள்! – மோடிஜி
அல்வாவுக்கே அல்வாவா?

balebalu
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத தமிழக அரசு ~ பிரதமர்
சரி அப்படி என்ன திட்டம் போட்டு ஒத்துழைப்பு தரல்ல
‘எய்ம்ஸ்’ ன்னு சொல்லி ஒரே ஒரு செங்கல் வெச்சோம் அதையும்
தேர்தல் பிரச்சாரத்துக்கு தூக்கிட்டு போயிட்டாங்க தம்பி

ℳsd இதயவன்
தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வு இல்லை ~ அண்ணாமலை
அப்ப ஜென்மத்துக்கும் ஓய்வே இல்லை ?!

கடைநிலை ஊழியன்
girl friend – உன்னோட ஃபோன் பேசிகிட்டே வெயில் ல நடந்து போனேன்.. கொஞ்சம் கூட வெயிலே தெரியல டா..
மேடம்.. இது நடிப்பு மேடம்..

balebalu
இடமாறுதலை தண்டனையாக கருதக் கூடாது – உயர் நீதிமன்றம்
ஆனா தண்டனையா இட மாறுதல் நடக்கும்

கோழியின் கிறுக்கல்!!
90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் எல்லாமே “REALS” தான்!!
இப்ப தான் எல்லாம் “REELS”!!

ச ப் பா ணி
ஹோம் வொர்க் என்பது கூகுளில் தேடி எழுதுவது
தற்காலத்தில்

ℳsd இதயவன்
காங்கிரஸ் கூட்டணி கசப்பிற்கு அதிமுகவிடம் மருந்து உள்ளது – வைகைச்செல்வன்
ஏற்கனவே ICU ல இருக்கிற காங்கிரஸை எக்ஸ்பியரி ஆன மருந்தை கொடுத்து முடிச்சு விட ப்ளானா?!

black cat 2
4 வருசத்துக்கு ஒரு தடவ வர்ற இந்த Feb 29 நாள ஊரே கொண்டாடிட்டு இருக்கு நீ யாரு ப்பா சோகமாவே இருக்க
நான் தான் சார் Feb 29 ல பொறந்தவன்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம் தென்னரசு வழக்கு : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி!

டிஜிட்டல் திண்ணை: 10 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த IT-ED கூட்டணி… அண்ணாமலை -மோடி இருபது நிமிடங்கள் பேசியது என்ன?

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *