update kumaru February 22-2024
சிங்கத்துக்கு சீதா, அக்பர்னு பேர் வச்சிட்டாங்களாம்… இந்தியா பூரா இதான் பேசுது… பாத்தியளானு பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டிருந்த நண்பர் பேப்பரை பாத்துக்கிட்டே கேட்டாரு.
அதான் இன்னிக்கு கொல்கத்தா கோர்ட் அதுக்கு தடை போட்டுருச்சே… பேரை மாத்தச் சொல்லி தீர்ப்பு சொல்லிட்டாங்க….னு நான் அப்டேட்டா சொன்னேன்.’
அதுக்கு அந்த நண்பர் என்னை ஏற இறங்க பாத்துட்டு, ‘சிங்கத்துக்கு பேரு வைக்கிறது இருக்கட்டும்… சோறு வச்சாங்களானு பாருங்க.
இன்னும் ரெண்டு மூணு மாசத்துல இதே ரெண்டு சிங்கமும் மெலிஞ்சு போச்சுனு நியூஸ் வருதா இல்லையானு பாருங்க’ அப்படினு சொல்லிட்டு பேப்பரை தூக்கிப் போட்டாரு…
நீங்க அப்டேஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
விவசாயிகளுக்கு எதிராக தோண்டப்பட்ட சாலைகள்,
கண்ணீர் புகை குண்டு
ரப்பர் தோட்டாக்கள்….
சொந்த மக்களுக்கே இந்த கதி….
“எதிரி” நாடுகள் சிக்குனா அதோகதி!!
வசந்த்
நோயாளிகளுக்கு புரியும்படி மருத்துவர்கள் எழுத வேண்டும்!
மருத்துவர்கள் ~தெரியாது மேடம்
Kirachand
நீங்க ஒரு டாக்டர்! ஒண்ணாங்கிளாஸ் வகுப்புல உங்களுக்கு என்ன தெரியணும்?
இங்கிலிஷ்ல கேப்பிட்டல் லெட்டர்ல தெளிவா எழுதுவது எப்படின்னு தெரியணும் டீச்சர்!
ℳsd இதயவன்
கூட்டணியைப் பற்றி இன்னும் சிந்திக்கவே இல்லை! – சரத்குமார்
ஒரே ஆள் தானே எப்ப வேணும்னாலும் சிந்திச்சிக்கலாம் னு விட்டுட்டிங்களா?!
கடைநிலை ஊழியன்
எனக்கு ஒரே ஒரு ஆசை தான் சார்..
பணம் நிறைய சம்பாதிச்சுட்டு.. பணம் எல்லாம் ஒரு விஷயமே இல்ல னு சொல்லணும் சார்…
ச ப் பா ணி
கூகுளில் எல்லாம் கிடைக்கும்
ஆனால் டவர் இல்லாத இடத்தில் கூகுளே கிடைக்கவில்லை
balebalu
தான் கொடுத்த தீர்ப்பு நியாயமில்லை என்று கோர்ட் உணர்வதற்கே
ஒரு ‘தேர்தல்’ தேவைப்படுகிறது
சரவணன். 𝓜
மெய்த்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது மணிப்பூர் உயர்நீதிமன்றம்.
எலக்சன் மட்டும் வராம இருந்திருக்கணும், அப்ப தெரிஞ்சிருக்கும்..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“சுவிட்சர்லாந்தை மக்கள் மறக்கும் அளவுக்கு காஷ்மீரை ஒரு சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்துவோம்!” -பிரதமர் மோடி புதிய உத்தரவாதம்
# இது தெரியாம சுவிட்சர்லாந்து போக நாலஞ்சு சீசன் டிக்கெட் புக் பண்ணிட்டனேப்பா..
நெல்லை அண்ணாச்சி
கூட்டணி அமைப்பது குறித்து “விரைவில்” அறிவிப்பு., கமல்ஹாசன்
# பதற்றத்தில்….
தேசிய, மாநில கட்சிகள்… மற்றும் NOTA.,!!!
ச ப் பா ணி
பஸ்ஸை விட பஸ்ஸில் ஏறும் பயணிகள் தான் தாமதமாய் வருகின்றனர்
ஆம்னி பஸ் அலப்பறைகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆப்
அடுத்தடுத்து ரெய்டு..30 நிறுவனங்கள் பாஜகவில் கொட்டிய கோடிகள் – பாகம் 1
‘சைத்தானாக’ அஜய் தேவ்கன்- ஜோதிகாவை அலறவிடும் மாதவன்