ஆளுநர் உரையில ஆளுநர் தேவையா? அப்டேட் குமாரு

டிரெண்டிங்

சட்டமன்றத்தை லைவ்வா பாத்துக்கிட்டிருந்தப்ப திருச்சியிலேர்ந்து நம்ம நண்பர் போன் பண்ணாரு. ‘ஏன்னே எனக்கு ஒரு டவுட்டு’னு கேட்டாரு.
சட்டமன்றம் பாத்துக்கிட்டிருக்கேன். அப்புறம் பேசவானு கேட்டேன்.
’இல்லன்னே அதப்பத்திதான் டவுட்டு… ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்னு சொல்றாங்களே… ஆளுநரே ஒரு பத்தி படிச்சிட்டு நிப்பாட்டிட்டாரு. அப்புறம் அதை எதுக்கு ஆளுநர் உரைனு சொல்லணும். தமிழ்நாடு அரசோட கொள்கை விளக்க உரைனு புது பேரு வச்சிக்கலாமே… நமக்கு என்ன பேர் வைக்கவா தெரியாது? இதை நீங்க முதலமைச்சர்கிட்ட எடுத்துட்டு போங்க’னு அப்படினு சொன்னாரு.

அய்யா… ஆளுநர் பதவியை அகற்றணும்னு தீர்மானம் போட்டவங்களுக்கு இதெல்லாம் தெரியாதானு அவர்கிட்ட சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
ஆளுநரின் நடவடிக்கைக்கு கருத்து தெரிவிக்காமல் நழுவிட்டாரே ன்னு உனக்கு கவலை
‘தாகூர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து ‘ன்னு எதுவும் சொல்லாமல் இருந்தாரே ன்னு எனக்கு சந்தோசம்

மயக்குநன்
இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது!- ஆளுநர் ரவி ஆதங்கம்.
ஆனாலும்… அரசியல்வாதிகள் நல்லா ‘அறுவடை’ செஞ்சுக்கிட்டேதானே இருக்காங்க சார்..?

black cat 2
Me – எவ்ளோ திட்னாலும் வெறுத்தாலும் நம்மள தேடி வர
மாதிரி உறவ சம்பாதிக்கனும்
My inner mind – அதுக்கு நீ 4 பேர் கிட்ட கடன் தான் வாங்கனும் அப்போ தான் உன்ன தேடி வருவாங்க

கடைநிலை ஊழியன்
ஏன் டா மச்சான் நீ லவ் பண்ணல.. உனக்கு லவ் னா பிடிக்காத.. ?
எனக்கு பிடிக்கிறது எல்லாம் இருக்கட்டும்.. என்ன யாருக்காவது பிடிக்கணுமே டா..

ச ப் பா ணி
நாளை மற்றுமொரு நாளே
90 kids க்கு
ValentinesDay2024

Thotti Prabha✨
என் ஒரு வரி காதல் கதை!
உனக்கு எத்தனை சகோதரர்கள் என்று கேட்டேன்…?
யாருமில்லை… நீ மட்டும்தான் என்றாள்…!

balebalu
ஏதோ ஒரு தடவை வாய் தவறி சொன்னால் Tongue Slip ன்னு கடந்து விடலாம்
ஆனா ஒரு பேட்டி முழுக்க அப்படி சொன்னால் 🤦😳
வட்டார வழக்குல ஆளுநர் ன்னா சபாநாயகர் ன்னு அர்த்தம் போல

mohanram.ko
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்!- அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
முதல் முறை ஆட்சிக்கு வந்ததோட நிறுத்தியிருந்தா, முதல் இடத்திலே இருந்திருக்கலாம்.. ஐடியா இல்லாத பசங்க

மயக்குநன்
மக்களவைத் தேர்தலில் திமுகவை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை!- நத்தம் விஸ்வநாதன்.
2019 மக்களவைத் தேர்தலில் இருந்தே… எந்தத் தேர்தலிலும் அதிமுகவை மக்கள் நம்பின மாதிரி தெரியலியே..?!

கோழியின் கிறுக்கல்!
அழைத்தால் பரவாயில்லை என்று சில விழாக்களும்,
அழைக்காவிட்டால் பரவாயில்லை என்று சில விழாக்களும் நமக்கு வந்துக் கொண்டே இருக்கின்றன!!

வசந்த்
கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
கையில டார்ச் இருக்கு ஆனாலும் நீங்க சூரிய வெளிச்சத்தை தேடி தான போறீங்க

கோழியின் கிறுக்கல்!!
உன் ‘ம்ம்’ என்னும் பதிலுக்காக தவித்துக் கிடக்கின்றன,
என் ஒரு பக்க உரையாடல்கள்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி ராஜினாமா செய்தது ஏன்? புழல் சிறைக்குள் நடந்தது என்ன?

ஆளுநர்கள் vs முதலமைச்சர்கள் : ஆளுநரின் அதிகாரம் என்ன? சட்டம் என்ன சொல்கிறது?

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *