இன்னிக்கு ஊர் ஃபுல்லா இந்த ஆயிரம் ரூவா பேச்சுதான். ஸ்டாலின் சொன்ன மாதிரி ஆயிரம் ரூபா அக்கவுண்ட்ல போட்டுட்டாருக்கா… உங்களுக்கு வந்துருச்சானு தண்ணீ குழாய்க்கிட்ட ஒரு அக்கா இன்னொரு அக்காக்கிட்ட கேட்டுகிட்டு இருந்தாங்க.
அதுக்கு இன்னொரு அக்கா, ஆமா அந்த பக்கம் கொடுத்து இந்த பக்கம் வாங்குற மாதிரி நேத்து ஒரு ரூபா மெசேஜ் வந்துருக்கு இன்னிக்கு ஆவின் நெய் விலைய ஏத்திட்டாங்க,,, இன்னிக்கு 1000 ரூபா வந்துருக்கு நாளைக்கு எதுஎது விலை ஏற போவுதோனு தண்ணீ குடுத்த தூக்கிக்கிட்டு கிளம்பிட்டாங்க…
இந்த அக்கா சொல்றத யோசிக்கிட்டே நானும் அங்கிருந்து கிளம்பிட்டேன்..
நீங்க அப்டேட்ட பாருஙக….
ஷிபின் Shibin
கேஸ் விலை 200 ரூபாய் குறைத்ததற்கு தேர்தல் வருகிறது என்று சொன்ன யாரும் ,
இப்போது 1000 ரூபாய் கொடுக்கிறது தேர்தல் வர போவதனால் என்று யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க .
கடைநிலை ஊழியன்
எப்ப பாரு phone ‘ல பாட்டு கேட்டுகிட்டே ஜாலியா இருக்க..
நானே office call earphones போட்டு பேசிட்டு இருக்கேன் டா..
வில்லாதி வில்லன் 2.0
நாளைக்கு திட்டம் தொடங்குறதுக்கு முன்னாடியே 1000 ரூபாய் கொடுத்துட்டாரு..
நீங்க 15 லட்சம் தருவதா சொல்லி 9 வருசமாச்சு ஜி!
#TNEmpowersWomen
https://twitter.com/i/status/1702303265806057632
Senthil Periyasamy
முதலில் இந்தப் படத்தைப் பார்த்தபோது இதன் அர்த்தம் புரியவில்லை…
ஒரு சிறிய துவாரத்தில் பாம்பின் வாழ் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை ஒரு பூனை பார்ப்பதாகவும், அது எலியின் வால் என்று நினைத்துக்கொண்டு வெளியே வரும் வரை அந்த வாலை இழுக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது… .
பிறகுதான் புரிந்தது… இந்த புகைப்படம் இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டியின் படைப்பு,
அவரது ஓவியத்தின் பொருள்: “யாருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியாமல், அபாயத்தை தொடுகிறீர்கள், ஏனென்றால் அறியாமை, பணத்தை நோக்கிய தேடல், விரைவான தீர்வுகளை நாடுதல், பொறுமையின்மை போன்ற குணங்களால் இன்று நாம் சூழப்பட்டுள்ளோம்.”
இன்றைய வேகமான மற்றும் பிஸியான வாழ்க்கையில், நாம் காண்பது உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே….
நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ?? சுகாதார நிலைமைகளை, நமது ஆரோக்கியத்தை எலியின் வால் என்று நாம் கருதுகிறோம் & சுவருக்குப் பின்னால் இருப்பது உண்மையான நாகப்பாம்பு என்று ஒருபோதும் யூகிக்க மாட்டோம்.
எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
உங்கள் உடல்நிலையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
நாகப்பாம்பின் வாலை எலி வாலாகக் கருதி விளையாட்டாக இருக்காதீர்கள்.
எப்போதுமே, வாழ்க்கை முக்கியமானது, ஆரோக்கியம் அதைவிட முக்கியமானது.
இந்த படத்தை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் முழு படத்தையும் பார்க்க முடியாது. முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
எனவே உங்கள் உடல்நிலையை கவனித்து ஆரோக்கியமாக இருங்கள்.
இதைப் பகிர்வதன் மூலம் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை உருவாக்க உதவலாம் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் நண்பர்களே..!
-மீள் பதிவு
Kirachand
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தா நல்லா இருக்கும்ணே…
ஏன்டா?
வருஷா வருஷம் வீடு வீடா போய் துணி துவைக்க, பாத்திரம் கழுவ, செப்டிக் டேங்க் கிளீன் பண்ண வேண்டிய அவசியம் இல்லயே…
தனி ஒருவன்
ஆர்.பி.வி.எஸ் மணியன் ~ எனக்கு வயசு ஆகிருச்சு சுகர் பிபி இருக்கு.. சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்படும் என்ன மன்னிச்சு விட்ருங்க..
இவ்ளோ பிரச்சினைய உடம்புல வச்சுகிட்டு இந்த வயசுல பண்ற வேலையா இது.
லாக் ஆஃப்
IBPS Clerk தேர்வு எழுதுனீங்களா? – முடிவு இதோ!
டெல்லியில் அமித்ஷா – எடப்பாடி ஆலோசனை!