அப்பாவு கேட்ட அம்பதாயிரம் கோடி ரகசியம்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

டீ கடையில கூட இன்னிக்கு சன் மியூசிக் சேனலுக்கு பதிலாக சட்டமன்ற லைவ் தான் போட்டிருந்தாங்க. ஏன்னா நம்ம ரவி ஆளுநரா இருக்குற வரைக்கும் சம்பவத்துக்கு உத்தரவாதம் உண்டுல்ல… அப்படித்தான் டிவி பாத்துக்கிட்டே இருக்கும்போது, ’பி எம் கேர் ஃபண்டுல இருந்து அம்பதாயிரம் கோடி ரூபா வேணும், ஐயா முடிஞ்சா வாங்கித் தாங்க’ அப்படினு அப்பாவு கேட்டாரே பாக்கலாம்.
என்னய்யா நம்ம சி எம் மே 37 ஆயிரம் கோடிதானே கேட்டாரு, இவரு என்ன சட்டுனு அம்பதாயிரம் கோடியா ஆக்கிட்டாரே?’னு நம்ம தம்பி கேட்பாப்ல.
‘அட…. லட்சம் கோடி கேட்டாலும் ஒரு ரூபா வரப் போறதில்ல. அப்புறம் கேட்குறதுல என்ன தயக்கம்னு சபாநாயகர் நெனைச்சிருக்கலாம்’ னு நான் சொல்ல… டீயும் முடிஞ்சது.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

Kirachand
தேர்தல் முடிந்ததும் ஓபிஎஸ் பாஜகவில் இணைந்துவிடுவார்! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதுக்கு முன்னாடியே பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து விடுமாண்ணே?

தர்மஅடி தர்மலிங்கம்
கார்கேவின் பேச்சு நல்ல என்டெர்டெயின்மென்டாக இருந்தது! – பிரதமர் மோடி!
இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு ஜி.?!

Mannar & company

Whatsappல யாருக்காக status வைக்கிறமோ அவர்கள் பார்த்துவிட்டால் நம்முடைய பிரச்சினைகள் முக்கால்வாசி தீர்ந்தது போல் மனசு லேசாகிவிடுகிறது!

ச ப் பா ணி
பா ஜ கவா அதிமுகவா?
இன்று முடிவெடுக்கிறார் வாசன்!
#தட் பூப்பாதையா சிங்கப்பாதையா மொமண்ட்

மயக்குநன்
எங்களது ரத்தம் அதிமுக ரத்தம்!- ஜெயக்குமார்.
அதான் பல குரூப்புகள் இருக்கோ..?!

 

balebalu
திங்கள் காலை மீடியா நவ் :
இத்துடன் கிளாம்பாக்கம் செய்திகள் முடிவடைந்தன
மீண்டும் அடுத்த வெள்ளி இரவு தொடரும்

எனக்கொரு டவுட்டு!?
இந்த ஆட்சில அதிகம் பாதிக்கப்பட்ட மனுஷன்..
ராகுல் காந்தியா?
ராகுலா, நேருங்க..

தர்மஅடி தர்மலிங்கம்
மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறார்! – ராகுல் காந்தி!
அப்போ…. காங்கிரஸ் தான் இந்தியா கூட்டணியில இல்லையோ.?!

கடைநிலை ஊழியன்
சாயங்காலம் 6 மணிக்கு மேல, manager என்ன வேலை சொன்னாலும், நாளைக்கு பாத்துக்கலாம் னு வீட்டுக்கு கிளம்புறான் பாரு..
அவன் தான் டா இளந்தாரி employee…

மயக்குநன்
தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்கட்சியினர் கூறுவது தவறு!- மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் பேச்சு.
நீங்க எப்போ ஆளுங்கட்சியா ஆனீங்க பாஸ்..?!

Mannar & company
சோகம்.. திகில்.. படபடப்பு இப்படி எந்தக்கிழமைக்கும் இல்லாத ஒரு சிறப்பு திங்கட்கிழமைக்கு மட்டுமே இருக்கிறது!

Kirachand
செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளிக்கிழமைகளுக்கு பழி வராமல்…தானே பழியை ஏற்றுக்கொள்ளும் திங்கள் கிழமையை இனி…
‘தியாகத் திங்கள் கிழமை’ என்று அழைப்போமாக!…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

”பெரிய விசில் அடிங்க” : சிஎஸ்கே பிராண்ட் அம்பாஸிடராக… பிரபல நடிகை ஒப்பந்தம்!

தொகுதிப் பங்கீடு: கொமதேக பாசிட்டிவ் ரியாக்‌ஷன்!

+1
1
+1
3
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *