update kumaru February 09-2024
“அப்புறம் இன்னிக்கு யாருக்குப்பா பாரத ரத்னானு கேக்குற அளவுக்கு அப்பப்ப அறிவிச்சுக்கிட்டே இருக்காங்க பாத்தியளா?” அப்படினு நம்ம நண்பர் டீயை உறிஞ்சுக்கிட்டே கேட்டாரு.
“இன்னிக்கு காங்கிரசோட முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா விருது அறிவிச்சிருக்காங்க. மூணு நாளா நேரு, இந்திரா காந்தினு காங்கிரஸ் தலைவர்களை வறுத்தெடுத்த மோடி இப்ப, அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நரசிம்ம ராவுக்கு பாரத் ரத்னா கொடுத்திருக்காரு. உலக மார்க்கெட்டுக்கு இந்தியாவோட கதவை தெறந்துவிட்டவர்னு புகழாரம் சூட்டியிருக்காருய்யா மோடி” அப்படினு நான் சொன்னேன்..
அதுக்கு அந்த நண்பர் டீய கீழ வச்சிட்டு, “அந்த கதவை மட்டுமா தெறந்துவிட்டாரு. 1992 ல பாபர் மசூதிய இடிக்கவும் கதவைத் தெறந்துவிட்டவர்தானப்பா நரசிம்ம ராவ்…” அப்படினு சொல்ல…
பாரத் ரத்னா பாலிடிக்ஸ் பக்கம் போகுதேனு சொல்லி நான் கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
கருமாரி அம்மனிடம் 8 பவுன் நகை திருட்டு…..
அர்ச்சகருக்கு வலைவீச்சு…
# வேலியே ” பவுனை ” மேயுது…!!!
mohanram.ko
14 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை எம்.பி பதவி தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி”- பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
கொடுத்தா மட்டும் போதாது, ஜெயிக்க வச்சி கொடுக்கணும்னு சொல்லி இருக்கலாம்… ஐடியா இல்லாத பசங்க
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஆக மொத்தம் ஆந்திராவை தாண்டி மேல போயிட்டா, மசூதில போயி தான் சிவனை கும்பிடனும், அத்தை பொண்ணு மாமன் பொண்ணுகளை அக்கான்னு கூப்பிடனும், KFC ல போயி பொங்கல் வடை ஆர்டர் பண்ணனும்..
வேற வேற..?
😂😂😂😂😂 pic.twitter.com/tfI9Slg6Nl
— James Stanly (@JamesStanly) February 7, 2024
ச ப் பா ணி
ஒரு பெரிய பணக்காரர் ஆடிட்டர் வேலைக்கு இன்டர்வியூ வைத்திருந்தார்.48000யும் 84000யும் பெருக்குங்க..இதான் கேள்வி னு சொல்லியிருக்கார். நூறு பேரும் கணக்கு போட்டாங்க.
ஒருத்தர் மட்டும் உங்களுக்கு எவ்வளவு வரனும் னு கேட்டாராம்.உடனே அப்பாய்ன்ட் செய்திட்டார்
-தென்கச்சியார்
Mannar & company
இன்னிக்கு மிக்ஸர் தின்னுகிட்டு இருக்குறவங்கல்லாம் யாருன்னு நினைக்கிறீங்க..
கல்யாணத்திற்கு முன்னாடி சாக்லேட் டேக்கு பொண்ணுங்க பின்னாடியே சுத்தினவங்கதான்!
ArulrajArun
சொந்த காலில் நிக்காம கல்யாண பந்தக்கால்ல கால் வைக்க கூடாதுன்னு நினைக்கிறவன் இந்த 90 கிட்ஸ்
ச ப் பா ணி
தெருவில் வாசிக்கும் புல்லாங்குழல் கேட்கும் போது அதே சத்தம் கேட்கிறது.நாம வாங்கி ஊதும்போது தான் ஊதாங்குழல் சத்தம் வருகிறது
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ராமர் கோயில் கட்டப்படுகிறது எனும் போது ஆயிரம் முறை கூட ஜெய் ஸ்ரீராம் சொல்லலாம் – முகமது ஷமி!
# மோதிஜி be like:
இவனுக்கு தான் ஏற்கனவே அர்ஜுனா விருது குடுத்துட்டமே.. இன்னும் ஹெவியா எதாவது எதிர்பார்க்கறானோ..?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
காதல், காதலர்களை வாழ வைக்கிறதா? – லவ்வர் விமர்சனம்!
கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : தொழிலாளர்களின் நிலை?
update kumaru February 09-2024