மச்சி பிரேக்கிங் நியூஸ் வந்துருக்கு பாரு எங்க வெற்றித் தலைவரை பத்தி… அப்படினு டீ குடிக்கும்போது நண்பர் சொன்னாரு. என்னய்யா அப்டேட்டுனு கேட்டேன். விஜய் போட்டி போடுற தொகுதி எதுனு லீக் ஆகியிருக்குனு ரொம்ப பரபரப்பா சொன்னாரு.
சரி உட்காருய்யானு சொல்லி அவரை உட்கார வைச்சி ஒரு டீ வாங்கிக் கொடுத்தேன். ‘ஏன்ய்யா… விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குதான் போட்டி போடுவேனு சொல்லியிருக்காரு. அதுக்காக இப்பதான் தேர்தல் ஆணையத்துல அப்ளிகேஷனே கொடுத்துருக்காரு. இன்னும் 2024 நாடாளுமன்ற தேர்தலே முடியல. இந்த தேர்தல் முடிஞ்சு யார் வர்றாங்க அப்படின்றதை வச்சிதான் அடுத்து சட்டமன்றத் தேர்தல் நடக்குமான்னே தெரியும். அதுக்குள்ள ஏன்யா இப்படி”னு சொல்லி தலையில அடிச்சுக்கிட்டேன்.
அந்த வெற்றி கழக மச்சி மறுபடியும் பேச வந்தாப்ல. ‘நான் அடிச்சா தாங்க மாட்டே… நாலு மாசம் தூங்க மாட்டே’னு விஜய் பாட்டைதான் பாடினேன்.
பயபுள்ள ஓடிட்டாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
குருநாதா
வெளிநாடு போனா அங்க இருந்து சாக்லேட் சரக்கு வாங்கிட்டு வர்ரதும்
இங்க இருந்து வெளிநாடு போனா முறுக்கு, கடலை முட்டாய் வாங்கிட்டு போறதும்
ஒரே ஆளா…
ℳsd இதயவன்
அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கருத்து தெரிவித்தது, அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது~ ஓபிஎஸ்
கருப்பன் குசும்புகாரன் இரட்டை இலையை எனக்கு வாங்கி கொடு ங்கிறான்?!
படிக்காதவன்
உத்தரகாண்டில் இனி ‘அத்தை / மாமன் முறை மகன் மகளை’ திருமணம் செய்ய முடியாது – செய்தி
நமக்கு அத்தை பொண்ணும் இல்ல, நம்மளை அத்தை பையன்னு சொல்லிக்கவும் பொண்ணு இல்ல…
வசந்த்
ரோஸ்டே முடிஞ்சு ப்ரொபோஸ் டே வந்துருச்சு கண்ணா நீ இன்னும் ரோஜாவ கையில வச்சிக்கிட்டு சுத்துற
யாரும் வாங்க மாட்டுக்காங்க
Sasikumar J
~ என்னடா கிரீன் சர்ட் போட்டு வந்து இருக்க யாராவது புரோபோசல் க்காக வெயிட்டிங்கா…
~ என் கிட்ட இருக்க நாலு சர்ட் ல அது ஒண்ணு அதை இன்னிக்கி போட்டு வந்தது குத்தமா….
-proposeday #propose
balebalu
மத்திய அரசே ஒரு ரூபாய் கொடுத்தா
26 பைசாதான் திருப்பி தர்றாங்க இதுல நீங்க வேற
ஒரு ரூபாய் கொடுத்துட்டு இன்னொரு பழம் எங்க , இன்னொரு பழம் எங்க ன்னு
சும்மா நச நச ன்னு கேள்வி கேட்டுகிட்டு
செங்காந்தள்
இந்த சம்மர்ல முத செஞ்சுரி மாமா. யாரு ஜெய்ஷ்வாலா மாப்பிள்ளை?
ஈரோடு மாமா ஈரோடு.
ச ப் பா ணி
நவீன கவனச்சிதறல்களில் முக்கியமானது notification ஒலி
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நீங்கள் சம்பாதிக்கும் ஆயிரம் ரூபாயை விட வலிமை வாய்ந்தது எது தெரியுமா..?
நீங்கள் சேமிக்கும் நூறு ரூபாய் தான்..!
ℳsd இதயவன்
மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியில் இடம்பெறுவோம் ~ டாக்டர் கிருஷ்ணசாமி
அம்மன் முறுக்கு கம்பிகளோடயா?!
ச ப் பா ணி
காதலனாய் இருக்கும் போது புரிந்து கொள்ள முயற்சிப்பது,
கணவனாய் இருக்கும் போது புரிய வைக்க முயற்சிப்பது
ஆண்களின் பரிணாமம்
குருநாதா
வயசாயிகிட்டு வர்ற மாதிரி பீல்
எப்படி சொல்ற
காதலர் தினம் லாம் தப்புனு தோனுது
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்தா? எடப்பாடி முடிவில் மாற்றம்!