அடிக்கல்லுக்கு அனிவர்சரி: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

கல்யாணத்துக்கு அனிவர்சரி கொண்டாடி பாத்திருக்கோம்…. காலேஜு, கம்பெனிகள் அனிவர்சரி கொண்டாடி பாத்திருக்கோம்….

அடிக்கல் நாட்டினதுக்கு அனிவர்சரி கேள்விப்பட்டிருக்கீங்களா?!

அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே ஜனவரி 27 ஆம் தேதிதான் பிரதமர் மோடி மதுரையில எம்ய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினாரு.

இதுக்கு ஐ விட்னஸ்சா அப்ப இருந்த முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், பழைய கவர்னரு பன்வாரிலால், அண்ணாச்சி பொன்னாரு, விஜயபாஸ்கரு எல்லாம் மோடிக்கு ரெண்டு பக்கமும் நின்னு கைதட்டுறாங்க.

அஞ்சு வருசம் முடிஞ்சு போச்சுய்யா… காலம் கைகொட்டி சிரிக்குதுய்யா… ஏதாச்சும் பண்ணுங்கய்யா…

நீங்க அப்டேட்ஸ் பாருங்கய்யா…

கடைநிலை ஊழியன்
234 ‘லையும் வெற்றி பெற்று தளபதி ஆட்சி அமைக்கிறார்..
கோட்டசாமி.. கோட்டசாமி.. இன்னும் கட்சியே ரிஜிஸ்டர் பண்ணல…

balebalu
ரஜினிகாந்த் சங்கி கிடையாது” – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இதை யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த போதே சொல்லி இருக்கணும்

ச ப் பா ணி
ஓய்வாக இருக்கும் போதுதான் காலாவதியான கவலைகள் புதுப்பிக்கப்படுகிறது

சரவணன். 𝓜
“ரஜினிகாந்த் சங்கி கிடையாது” – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
கருப்பன் குசும்பன்.. லால் சலாம் படத்துக்கு புரமோஷன் தேடறான்..

ℳsd இதயவன்
திமுகவையும், விசிகவையும் பிரிக்க முடியாது ~ ஸ்டாலின்
தொட்டு தொடரும் இரண்டு ஷீட் பட்டு பராம்பரியம்?!

நெல்லை அண்ணாச்சி
திருநெல்வேலி to சென்னை – நாளைய ஆம்னி பஸ் கட்டணம் ரூபாய் 4110 வரை
# நியாயமா.,.ரே..!!

கடைநிலை ஊழியன்
ஊர் என்ன யோசிக்கும் என்று யோசித்தால், நீங்கள் யோசித்ததை செய்ய முடியாது !!

balebalu
தினம் தினம் ஏதாவது உளறி பேச வேண்டியது
பின் அப்படி சொல்லவில்லை இப்படி சொல்லவில்லை என்று பின் வாங்குவது
இதே வேலையா போச்சு
-TNGovernor

Sasikumar J
மாத்திரையை வச்சு தான் இத்தனை வருஷம் உயிர் வாழ்ந்திட்டு இருக்கேன்…
அச்சச்சோ என்ன ஆச்சு ப்ரோ..
அடேய் மெடிக்கல் ஷாப் வச்சு இருக்கேன் டா…

ச ப் பா ணி
ஆளுநரின் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பு!
தட் டீ சாப்பிடுங்க ஆதி மொமண்ட்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: கொஞ்சம் டஃப்தான்… திமுக நிர்வாகிகளை எச்சரித்த உதயநிதி

ரக்‌ஷனின் காதல் கதை… மறக்குமா நெஞ்சம் டீசர் ரிலீஸ்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *