இன்னைக்கு கிண்டி பல்கலைக்கழகத்துல பேசுன ஆளுநர் ரவி ‘நேதாஜி இல்லைனா இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்காது. காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை’னு பேசிவிட்டாரு.
இதே ஆளுநரு தான் போன வருஷம் காந்தி ஜெயந்தி அன்னைக்கு “இந்தியாவின் சுதந்திரத்துல காந்தி ஒரு முதன்மையான தலைவரா இருந்தாரு’னு பேசிருக்காரு…
வர 30ஆம் தேதி காந்தி 76வது நினைவு தினம் அனுசரிக்கப்பட இருக்கு, அப்போ மறுபடியும் ’காந்தி தாத்தாவால தான் சுதந்திரம் கெடச்சது’னு சொல்ல போறாரு… அப்படி தானே!?
ஆளுநர் ரவிக்கு யாரால சுதந்திரம் கெடச்சுதுனு வேனா குழப்பமா இருக்கலாம். ஆனா அவரால தான் எல்லா சேனலுக்கும் தெனமும் ஒரு எண்டெர்டெயின்மெண்ட் கன்டென்ட் கிடைக்குது.
ஆனா காந்திக்கு வந்த சத்திய சோதனைய பாத்தீங்களா?
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
குருநாதா
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹200 குறைவு!
என்பதே இன்றைய காலகட்டத்தின் பொன் மொழி…
ச ப் பா ணி
நீ எனை மறந்தாலும்… நான் உனை மறக்க மாட்டேன்
“கடன் கொடுத்தவன்”
வசந்த்
தற்போது அயோத்தியின் நிலவரம் எப்படி இருக்கிறது ரமேஷ்?
அயோக்கியர்கள் அனைவரும் ஒன்றிணைந்த இடமாக காட்சியளிக்கிறது சுரேஷ்..
balebalu
ராமர் கோவில் கட்டியாச்சு
இனிமே எல்லாம் சுபீட்சமா இருக்கும் ன்னு நினைச்சா
காலையே நிலநடுக்கமாம்…
மயக்குநன்
இந்தியா கூட்டணியின் நிலை ‘சிறப்பாக’ உள்ளது!- ராகுல்.
‘ற’-வா… ‘ரி’-யா..?!
தர்மஅடி தர்மலிங்கம்
பாஜக-வை பாதுகாக்கும் கருவியாக, ராமர் கோயிலை எடுத்து வருகிறார்கள்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.
காங்கிரஸை… காக்கதான் நீங்க எந்த கருவியையும் எடுக்கலயே.?!
மயக்குநன்
ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த இடம் கோடநாடு!- சசிகலா.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச இடம் பெங்களூரு ஷாப்பிங் மால்தானே..?!
Kirachand
பாஜகவுக்கு வேட்டு வைக்க வேறு யாரும் வேண்டாம்…ஆளுநர்களே போதும்! – முதல்வர் ஸ்டாலின்
அப்ப…ஓட்டு வாங்க இல்லயா?
ச ப் பா ணி
பொட்டல் காட்டில் ‘கொடி கட்டிப் பறக்கிறது’
-ரியல் எஸ்டேட் தொழில்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
AK63: அஜித் ஜோடியாக நடிக்கப்போவது இவர் தானா?
உச்ச நீதிமன்றம் சென்ற அமைச்சர்கள்: அதிமுக பாஜக கேவியட் மனு!