வார் ரூம் ஆர்மி தம்பி ஒருத்தர் ஆசையா ஒரு வீடியோவை கொண்டாந்து என்கிட்ட காட்டினாரு. அண்ணா மணப்பாறையில எப்படி அண்ணாமலை மாஸ் காமிச்சிருக்காரு பாருங்கன்னாரு. அந்த வீடியோவ பார்த்தேன். மணப்பாறையில பயணம் போனப்ப அண்ணாமலை ஒரு முறுக்கு கடையில ரொம்ப பவ்யமா முறுக்கு சுடுற வீடியோதான் அது.
அதைப் பாத்துட்டு நான் சும்மா இருக்கமாட்டேனா… டக்குனு அண்ணாமலையோட பொன்மொழி ஒண்ணு ஞாபகத்துக்கு வந்து தொலைச்சுடுச்சு. ‘நான் இங்க இட்லி சுடவோ தோசை சுடவோ வரலைங்ணா… நான் ஒரு தலைவன்’ அப்படினு ஒரு பிரஸ்மீட்ல சொன்ன அந்த பொன்மொழியை அந்த தம்பிக்கிட்ட சொல்லிட்டேன். ’அட என்னண்ணே… அவர் சொல்றதெல்லாம் இன்னுமா நீங்க ஞாபகம் வச்சிக்கிட்டு இருக்கீங்க”னு டக்குனு கேட்டுட்டாப்ல.
அது ரைட் அங்க தலைவன் வடை, இங்க தொண்டன் முறுக்கு போவியா…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
மயக்குநன்
இண்டியா கூட்டணியில் எதுவும் ‘நடப்பது’ போல் தெரியவில்லை!- நிதிஷ் குமார்.
ஏன்… பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் நடந்ததை மறந்துட்டீங்களா ஜீ..?!
Kirachand
கடன் வாங்கித்தான் இந்த வருஷம் தீபாவளிய கொண்டாடணும்டா…
அதை ஏன்டா என்கிட்ட சொல்ற? உன்கிட்டதான கடன் வாங்கணும்?
மயக்குநன்
எனக்கு கேரளம் நிறைய கற்றுத் தந்தது!- கமல்ஹாசன்.
மூன்று தேர்தல்களில் தமிழகம் கற்றுத் தந்ததை விடவா வாத்தியாரே
Mannar & company™
உண்மையில் பாகு’பலி’யாவது குலோப்ஜாமூனில்தான்!
தீபாவளி_ஸ்வீட்ஸ்
balebalu
போன வருஷ தீபாவளிக்கு வாங்கின கட்ட பையை திருப்பி கொடுத்தா 50 ரூபாய் தள்ளுபடி ன்னு அறிவிக்கலாம்
ஐடியா இல்லாத ஜவுளி கடைக்காரங்க
கடைநிலை ஊழியன்
எல்லாரும் கிரிக்கெட் பாத்துட்டு ஜாலியா இருக்காங்க..
இந்த வாரம் முழுக்க வேல பாத்தா தான்.. தீபாவளி போனஸ் கிடைக்கும் நமக்கு.
மயக்குநன்
‘ஜப்பான்’ படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு கதையைக் கணிக்க முடியாது!- இயக்குனர் ராஜு முருகன்.
நீங்க வேற… படத்தை முழுசா பார்த்த பிறகுமே நிறைய படங்களில் கதையைக் கணிக்க முடியலை தம்பி..!
balebalu
நல்ல வேளை HappyStreet உள்ள புகுந்து நாயே நாயே ன்னு திட்டி யாரையும் அடிக்கல்ல
லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காசா மீது அணுகுண்டு? இஸ்ரேலிய அமைச்சர் சர்ச்சை!
83 ரன்களுக்கு ஆல்-அவுட் : இந்தியாவிடம் படுதோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா!