அண்ணன் ஸ்டாலினும், ஆளுநர் ரவியும் உக்காந்து பேசி பிரச்சினைகளை தீர்க்கணும்னு அக்கா தமிழிசை சொல்லியிருக்காங்க. இதை பேப்பர்ல படிச்சிட்டிருக்கும்போதே வாயில வச்சிருந்த டீ பொங்கி சிதறி பக்கத்துல உட்கார்ந்திருந்தவங்க மேல எல்லாம் தெறிச்சிடுச்சு. அப்படி ஒரு தெறி சிரிப்பு சிரிச்சுட்டேன்.
ஏனுங்க அக்கா…தெலங்கானாவுல முதலமைச்சர் கேசிஆர் உங்களை நேருக்கு நேர் பாக்கறதே ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவைதான் அப்படிங்குற அளவுல இருக்கு. ஆனா தமிழ்நாட்ல அரசியல் ரீதியா மோதிக்கிட்டாலும் முந்தா நேத்து குடியரசுத் தலைவர் வந்தப்ப கூட ஸ்டாலினும், ரவியும் ஏர்போர்ட்ல பக்கத்து பக்கத்துலதான் நின்னுக்கிட்டிருந்தாங்க. அதனால தெலங்கானாவுல முதல்ல கேசிஆரோட உக்காருங்க அக்கா. அப்புறம் தமிழ்நாட்டப் பத்தி பேசலாம்.
நீங்க அப்டேட் பாருங்க!