இன்னிக்கு நம்ம கொலிக் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் கிளம்புனாரு. என்கிட்ட வந்து, வரேன் சார்… நாளைக்கு பாப்போம்’னு சொன்னார்.
என்ன பாஸ் அதுக்குள்ள கிளம்பிட்டிங்கனு கேட்டேன்… வைஃப் கூட வெளிய போறேனு சொன்னாரு…
அதெல்லாம் இருக்கட்டும், இன்போசிஸ் நாராயண மூர்த்தி இளைஞர்கள் எல்லாம் 70 மணி நேரம் வேலை செய்யனும்னு சொல்லிருக்காரு. நம்ம ஆபிஸுலயும் அத பத்தி பேசிக்கிட்டு இருங்காங்க தெரியுமானு கேட்டேன்.
அதுக்கு அவரு, “இதுக்கே என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டிங்கிறீங்க”னு சண்ட மேல சண்ட போடுறா… இதுல 70 மணி நேரம்னா டைவர்ஸ் கன்பார்ம்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
நானும் வீட்டுக்கு கிளம்புறேன்…
நீங்க அப்டேட்ட பாருங்க…
மயக்குநன்
மணிப்பூர் வன்முறைக்குக் காரணம் எல்லைதாண்டிய தீவிரவாதமே!- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்.
ஓகோ… அதான் நம்ம ஜீ மணிப்பூர் எல்லையைத் தாண்டலையோ..?!
balebalu
மொட்டை மாடியில் வாக்கிங் போகிறவர்கள் எண்ணிக்கை குறைந்தால்
அன்று இந்தியா மேட்ச் இருக்கு ன்னு அர்த்தம்
நெல்லை அண்ணாச்சி
ஆளுநரை மாற்ற வேண்டாம்- முதல்வர்…
ஆமாம் ..ஜி ..எங்களுக்கும்
பொழுது போகாது- தமிழ் ” கீச்சாளர்கள் “…!!!
Mannar & company
எந்தப் பக்கம் போனாலும் “கேட்”ட போடுறாங்களே என்கிற மாதிரிதான் இருக்கிறது நான்கு வழிச்சாலைகளில் இருக்கும் “டோல்கேட்கள்”!
Kirachand
இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்! – இன்போசிஸ் நாராயணமூர்த்தி
எங்க ‘ஜி’ ஒரு நாளைக்கு 22 மணி நேரம் உழைக்கிறாரு போவியா!
கடைநிலை ஊழியன்
இப்பெல்லாம் டவுன் பஸ்ல உட்கார்ந்துட்டு, ஃபோன் ல, இங்க வந்துடேன், அங்க வந்துடேன் பொய் சொன்னா மாட்டிருவோம் போல..
ரெக்கார்டர் அடுத்த ஸ்டாப் என்னனு போட்டு குடுத்துருது !!
balebalu
விவசாயிகளிடம் இருந்து பசு சாணம், கோமியம் கொள்முதல்- ராஜஸ்தான் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
வடக்குல ஜெயிக்கிறது எப்படி ன்னு கத்துக்கிட்டாங்க ஓட்டு கன்ஃபார்ம்
மயக்குநன்
திமுக ஆட்சியில் விவசாயம் அழிந்து வருகிறது!- எடப்பாடி பழனிசாமி.
ஏன்… எதிர்பார்த்த அளவுக்கு உங்களால ‘அறுவடை’ செய்ய முடியலையோ..?!
கோழியின் கிறுக்கல்!
நடுத்தர வர்க்க மக்களுக்கு இது,
தீபா”வலி”!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
ODI World Cup 2023: 6வது வெற்றி.. தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்!
ஆந்திராவில் ரயில்கள் மோதி விபத்து : 3 பேர் பலி!
அமைச்சர்கள் மீதான வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!