இன்னிக்கு சாயந்திரம் டீ குடிச்சிக்கிட்டே நண்பர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன், நாளைக்கு நாள மாறு நாள் லீவு சிவகாசி போலாம்னு இருக்கேனு சொன்னாரு…
எதுக்குனு கேட்டேன்… தீபாவளி வருதுல பட்டாசு வாங்கத்தான்… அங்க காசு கம்மில… அதனால ஒரு ஆயிரம் ரூபாய்க்கு சிவகாசி போய் மொத்தமா பட்டாசு வாங்கிட்டு வரலாம்னு இருக்கேனு சொன்னாரு…
அட போயா… சென்னையில இருந்து சிவகாசி போய்ட்டு வரவே ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆகும்… அதுக்கு இங்கேயே வாங்கிக்கலாம்னு சொன்னேன்…
அட இத யோசிக்கலேயேனு சொல்லிட்டு ப்ளான கேன்சல் பன்னிட்டாரு…
எதோ நம்மளால முடிஞ்சது..
நீங்க அப்டேட்ட பாருங்க…
Kirachand
மணிப்பூருக்கு செல்லாத மோடி என் அருகில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதை நான் விரும்பவில்லை! – மிசோரம் முதல்வர் ஜோரொம்தங்கா
நீ… நீ…நீதான் மானஸ்தன்யா… மானஸ்தன்…
நெல்லை அண்ணாச்சி
ஒரே…ஒரு bomb..” பிரமுகர் ” ஆனார். # கருக்கா வினோத்..!!!
Mannar & company
வாரத்தில் 70 மணிநேரம் உழைத்தால் நாம பெரும் பணக்காரர் ஆகிடலாம்னு நினைச்சேன்,
அப்புறம்தான் தெரிந்தது வாரத்தில் 70 மணிநேரம் நாம உழைத்தால் முதலாளிதான் பெரும் பணக்காரர் ஆவார்னு!
புல்லு முளைக்கும் வரை சரக்கு ரயில் நிறுத்தி வைத்தது தப்பில்லை, ஆனால் மாடு மேய் வது கூட தெரியாமல் அதை எடுத்துப் போவது தான் தவறு ப்ரோ 🤣🤣🤣 pic.twitter.com/5PM99eKAel
— கிருஷ் (@krish_itz) October 26, 2023
balebalu
அவரு வீட்டுல எதுக்கு IT ரெய்டு விடுறாங்க ?
அதுவா
குடும்பத்தோட ‘ஆம்னி பஸ்’ ல சொந்த ஊர் போயிட்டு திரும்ப வந்தாராம்
Zen Selvaa
குடிசையில் இருந்த ராமரை கோபுரத்தில் வைத்திருக்கிறோம் – அமித்ஷா
இதனால குடிசைல வாழும் மக்களுக்கு என்ன பயன்..?
தர்மஅடி தர்மலிங்கம்
“தமிழகத்தில் நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக-வால் மட்டுமே தரமுடியும்” – அண்ணாமலை!
அவரு பொய் சொல்லமாட்டார்னு இவரு எப்படியெல்லாம் பொய் சொல்றாரு பாருங்க.?!
mohanram.ko
ஆளுநர் தலைமேல் பெட்ரோல் குண்டு போட்டால்தான் திமுக ஒத்துக்கொள்ளும் – அண்ணாமலை
தட் கட்சி – புரிஞ்சிடிச்சி…
Oscar winning performance. pic.twitter.com/wEuNhVlrzo
— The Best (@ThebestFigen) October 26, 2023
ℳsd ❝இதயவன்❞
அ.தி.மு.க 40 தொகுதிகளிலும் வென்றால் எடப்பாடி பிரதமராவார்’ ~அதிமுக ராஜேந்திர பாலாஜி
அமெரிக்க அதிபர் ஆவாரு சொல்லாம இதோட நிறுத்துனீங்க பாருங்க அதுல வரைக்கும் சந்தோஷம்?!
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
லாக் ஆப்
டிஜிட்டல் திண்ணை: ஆளுநரின் ‘124’ திட்டம்… முளையிலேயே முறியடித்த ஸ்டாலின்
ட்ராபிக்கில் போலீசை தாக்கி தப்ப முயன்ற ரவுடி : நடந்தது என்ன?
விபத்தில் கணவனை இழந்த தாய்: வீடு கட்டிக்கொடுத்த போலீஸ்!