இன்னிக்கு நான் ஆபிஸுக்கு லீவு. சாயங்காலமா கரெக்டா டீ குடிக்குற நேரத்துல… ஆபிஸ்ல இருந்து வீடியோ கால்ல வந்தாரு நம்ம லவ்குரு…
ஆனா வீடியோல்ல அழுகை குரல் மட்டும் கேட்குது… முகத்த காணோம். “என்னய்யா இது… முகத்தை காட்டுய்யா”ன்னு சொன்னேன்.…
அதுக்கு லவ்குரு, “அண்ணே அதாம்ன இது… இன்னைக்கு ரக்ஷா பந்தன். காலைல ஆபிசுக்கு வந்ததும் ஒரு பொண்ணு வந்து ’அண்ணா’ன்னு கையில ராக்கி கட்டி விட்டுச்சி… நானும் ‘பாசமலர்’ சாவித்ரி-சிவாஜி ரேஞ்சுக்கு பெருமையா பீல் பண்ணேன்.. ஆனா அதுக்கப்புறம் பாத்தா ஆபிசுல இருக்குற மொத்த பொண்ணுங்களும் கைல கட்ட இடமில்லாம இப்படி மூஞ்சு புல்லா ராக்கி கயிறா கட்டி விட்டாங்கண்ணே” சொல்லிட்டு அழாத குறைதான்.
”அட பாவத்த… சரி வருத்தப்படாத… உன் தங்கச்சியெல்லாம் நல்லா பாத்துக்க”ன்னு என் பங்குக்கு சொல்ல… கடுப்புல லவ்குரு வீடியோ கால்ல கட் பண்ணிட்டாரு.
’நல்ல வேல இன்னைக்கு நாம லீவு போட்டோம்… இல்லான்னா என்ன ஆயிருக்கும்’னு நினைச்சிக்கிட்டே டீ குடிக்க ஆரம்பிச்சேன்…
சரி நீங்க அப்டேட் குமாரு பாருங்க…
குருநாதா
என்னடா உன் ஆளு, உங்க வீட்டுக்கு வந்து ராக்கி கட்டிட்டு போய்ட்டானு ஹேப்பியா சொல்ற..
ராக்கி அவ வளர்க்கிற நாய் குட்டி மச்சான்…
மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩
தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு..
~ சிலிண்டர் விலைய குறைச்சிட்டு, டோல்கேட்டுல ஏத்துனேன் பாரு அதாம்லே வர்கீசு?!
*Mannar & company*
ஏன்ணே அவனை அடிக்கிறிங்க?
பின்னே என்னப்பா..
ஒரு பொண்ணு அவனுக்கு ராக்கி கட்டி விட்டுச்சு பதிலுக்கு இவன் தாலிக்கட்ட போயிருக்கான்பா…
ஒண்டிப்புலி
ஆஃப்கான்வரை அகண்ட பாரதம் அமைப்போன்னு சொன்னிங்களேடா
கடைசில அருணாச்சல பிரதேசத்த தூக்கி குடுத்துட்டுடீங்களேடா
கடைநிலை ஊழியன்
மாச கடைசி.. காசு இல்ல னு சொல்லுவாங்க.. ஆனா வீக்கெண்ட் பார்ட்டி பண்ணுவாங்க..
நம்பாத…
ராதிகா
YouTube பாக்கும்போது எப்படி AD s எல்லாம் skip பண்ணிட்டு பாக்குறோமோ
அதே போல நம்மீதான விமர்சனங்களையும் skip பண்ணிட்டு போய்ட்டே இருக்கணும்.!!!
balebalu
தாலி கட்டும் நேரத்தில் நாத்தனாருக்கு கொடுக்கும் திடீர் மரியாதை போல தான்
தேர்தல் நேரத்தில் வரும் ரக்க்ஷா பந்தனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும்
மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩
இன்னும் 4 கருத்துக்கணிப்பு எதிரா வந்தா கேஸ் சிலிண்டரை இலவசமாவே குடுப்பாங்க போலயே?!
படிக்காதவன்
மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே
பெண் : எனக்கெப்படிடா தெரியும்
நானென்ன வானிலை அறிக்கையா சொல்றேன்…
balebalu
வந்தாரை வாழ வைக்கிறது மட்டுமல்ல
அவங்க பண்டிகையும் சேர்ந்தே கொண்டாடி மகிழ்கிறது
#சென்னை
100% சிரிப்பு இலவசம்!
பூமிக்கு மிக அருகில்.. வீட்டு மனைகள் விற்பனைக்கு…
மிக குறைந்த விலையில்.
அழைத்து சென்று காண்பித்து திரும்ப அழைத்து வர லாண்டர் வசதி…
சிவசக்தி சிட்டி, தென் துருவ பகுதி, சந்திர மண்டலம்..
இன்றே முந்துவீர்
Vidhya
நம்மாளு ஜிம்முல.. பயிற்சி செய்த போது விடாமல் அடித்த செல்போனை எடுத்தான்…
“ஹலோ..”
“ஏங்க…நீங்க வர லேட்டாகுமா …”
“ஆகலாம்..”
“நானும் ஃப்ரெண்டும்…நகை கடைக்கு வந்திருக்கோம்…. நம்ம போன தடவை பார்த்த சிகப்பு கல் நெக்லஸ்….இன்னும் பத்தாயிரம் குறைச்சு தர்றேங்கறார் கடை ஓனர்…வாங்கிடவா.. ? ”
” தாராளமா வாங்கிக்கோ “..
” வாவ்…நீங்க ஸ்வீட் ஹப்பி…💞…..அப்புறம் நீங்க ஆட்சேபம் பண்ணலைண்ணா… அடுத்த மாசம் வர என் பர்த் டேக்கு…பக்கத்து புடவை கடைல ரெண்டு பட்டு புடவை எடுத்துக்கவா…? ”
” இது எங்கிட்ட கேட்கணுமா…தாராளமா வாங்கிடு..”…
” ஐ லவ் யூ ஸோ மச்…தாங்ஸ் டார்லிங்….bye..bye..”…
இப்படி பேசி…போனை வச்சுட்டு நம்மாளு ஜிம்ல இருக்குற கூட்டத்தை பாத்து கேட்டான் பாருங்க ஒரு கேள்வி…
” ஹலோ.. ஃப்ரெண்ட்ஸ்…..இந்த செல்போன் யாருது…? “”..
லாக் ஆஃப்
நாளை நள்ளிரவு முதல் உயரும் சுங்கக்கட்டணம்!
’கொடநாடு வழக்கு… அதிமுக பைல்ஸ்: கொந்தளித்த எடப்பாடி