’ரூ’லாம் ஓகே… ரூபாய எப்போ தருவீங்க? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட் இலச்சினை அறிவிச்சப்ப ரூபாய் அடையாள குறியீடு ’₹’ க்கு பதிலா ’ரூ’னு அறிவிச்சிருந்தாரு.

இத பாத்துட்டு டீக்கடைல ஒரு கூட்டம், ’தமிழ் மேல எவ்ளோ பற்று பாத்தியா’னு சவுண்டு விட்டாங்க… இன்னொரு கூட்டம் ‘தேசிய ஒருமைப்பாட்ட சிதைக்குறாங்க’னு சொல்லி வருத்தப்பட்டாங்க..

ரெண்டு கூட்டத்தோட பேச்சையும் கேட்டுட்டு இருந்த டீக்கட மாஸ்டர், ”ரூபாய் ரூபாய்னு நீங்க ரெண்டு கூட்டமும் ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கீங்க.. அப்படியே ரெண்டு குரூப்பும் ரொம்ப நாளா பாக்கி வச்சிருக்கிற அந்த அக்கவுண்ட செட்டில் பண்ணீட்டிங்கனா, நான் என் கண்ணால அந்த ரூபாய பாத்துருவேன்”னு சொன்னாரு…

ரெண்டு குரூப்பும் இருந்த இடம் தெரியாம நைசா எஸ்கேப் ஆகிட்டாங்க…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun memes trolls update kumaru trending tweets

2026 தேர்தலில் சாதாரணமாக ஓட்டு போடக்கூடாது; நீங்க ஓட்டு குத்துற குத்துல EVM உடையணும் – அண்ணாமலை
-அப்போ ஓட்டு மிஷின் மேல கல்ல தூக்கி போடனும்.

ச ப் பா ணி

தேங்காய் எண்ணெய் தேய்க்கும்போது.. மீதமானால் கை,கால் தான் டிஸ்யூ பேப்பர்

சரவணன். 𝓜

தமிழுக்கு பெருமை சேர்க்க பிரதமர் நினைக்கிறார் – அண்ணாமலை

ஓகோ.. அதனால தான் இயற்கை பேரிடர் நிதி, பள்ளி கல்வி நிதி, ஜிஎஸ்டி வரி ன்னு எதையும் ஒதுக்கீடு செய்ய மாட்டேங்கறாங்களா..

Writer SJB

ஹோலி பண்டிகைக்காக மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூடும் உத்தர பிரதேச அரச
அப்ப ரம்ஜானுக்கு கோயில்களை எல்லாம் தார்ப்பாய் போட்டு மூடுவீங்களா 

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

எல்லாரும் Grok ஐ கேள்வி கேட்கறாங்க.. நம்மளும் கேட்போம்
grok சாப்பிட்டியா..?
எனக்கு வேற கேட்க தெரியாது ஆத்தா..
-90skids

ArulrajArun

தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் – செய்தி
-மூனு நாள் மழை பெஞ்சுட்டு மூணு மாசம் வெயில் வெளுத்து வாங்க போகுது

ச ப் பா ணி

ஜீன்ஸ் பேண்ட் துவைப்பதற்கு எக்ஸ்பயரி டேட் இல்லை

லாக் ஆஃப் memes trolls update kumaru trending tweets

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share