பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்த நண்பனுக்கு கால் பண்ணி செலிப்ரேஷன் எப்படி போகுதுன்னு கேட்டேன்.
“அட நீ வேற ஏன்டா கடுப்புகள கிளப்புற. இங்கயாவது வந்து நிம்மியதா இருக்கலாம்னு பார்த்தா… பெயிண்ட் அடிக்க சொல்றாங்க. வீட்டை சுத்தம் பண்ண சொல்றங்க. நிம்மதியா இருக்க விடமாட்றாங்க. ஏன்டா பொங்கலுக்கு வந்தோம்னு ஆகியிருச்சு மாப்ளன்னு” ரொம்ப ஃபீல் பண்ணி சொன்னான்.
“பொங்கல் வாழ்த்துக்கள் மாப்ள. நல்லா என்ஜாய் பண்ணி செலிபிரேட் பண்ணுன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
என்னடா இப்படி வளைச்சு கட்டி சாப்பிடுற
மனசுக்கு பிடிச்ச வேலையை செய்ய சொல்றாங்க அண்ணே
எனக்கு இதான் பிடிச்சிருக்கு
எல்லாம் ஒரு passion க்காக தான்…

Mannar & company
உங்கள் கனவு இல்லம் சின்னதாக இருக்கட்டும்.
ஏன்.. எல்லோரும் கனவு வீடு பெருசா இருக்கணும்னு சொல்லுவாங்க நீங்க என்னன்னா..
ஆயுதபூஜை, பொங்கல் இதுக்கெல்லாம் ஒட்டடை அடிச்சு வீட்ட சுத்தம் பண்ணி பாரு அப்ப தெரியும்!

ArulrajArun
பரபரப்பா போகின்ற இந்த உலகத்தில் பண்டிகை கொண்டாட்டங்கள் எல்லாமே Part Time சந்தோசங்கள் தான் …

படிக்காதவன்
நான் சாதாரண மனிதன்தான்
கடவுள் அல்ல ~ மோடி – செய்தி
இப்ப யார் உங்களை கடவுள்னு சொன்னது…

ச ப் பா ணி
பார்க்கலாம் என்பதை விட பாத்துக்கலாம் விடுங்க
என்பது ஆறுதலானவை
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அஜித் டீம், கார் ரேஸ்ல மூணாவதா வந்துருக்குன்னு ஊரே சந்தோசமா இருக்கு.. நீ ஏன்டா சோகமா இருக்க..?
நாங்க தான் சார் முதலாவதா வந்த டீம்..

ச ப் பா ணி
ராமு: இந்த வாரம் என்ன ப்ளான்?
சோமு: இந்த வாரத்தை எப்படி கடக்கிறதுன்னு தான் ப்ளான்

iQKUBAL
ஊரே தலயோட வெற்றிய கொண்டாடிட்டு இருக்கு.. நீ ஏப்பா அமைதியா இருக்க?
நாங்க, விடாமுயற்சி டீம் சார்..

கோழியின் கிறுக்கல்!!
வயது ஏற, ஏற Mobile phoneல் Font size அதிகமாகிக் கொண்டே போகின்றது!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்