பணி செய்யவிடாம தன்னை தடுக்குறதா போலீஸ்ல புகார் கொடுத்திருக்காராமே ஆளுநர் ஆர்.என்.ரவினு டீ கடையில பேச்சு வந்துச்சு.
அப்ப மாஸ்டர் டக்குனு டீ கிளாசை கீழ வச்சிட்டு, ‘ஏன்யா… அவரை தமிழ்நாட்ல எல்லாரும் உங்க பணியை செய்யுங்க, மசோதாவுல கையெழுத்து போடுங்க’னுதானே கேட்டுக்கிட்டிருக்காங்க. அப்படின்னா பணி செய்யவிடாம தடுக்கறது யாரு?’னு கேட்டாரு.
என்னனே டக்குனு இம்மாம்பெரிய அரசியலை பேசிட்டேனு கேட்டேன்.
அதுக்கு மாஸ்டர் சொன்னாரு… தம்பீ நான் என்ன கவர்னரா ஆள் இல்லாத கடையில டீ ஆத்த? டெய்லி எவ்வளவு அரசியல் கேட்குறேன் தெரியுமானு மறுபடியும் ஒரு பாம் போட்டாரு.
நான் டீ குடிச்சுட்டு வந்துட்டேன், நீங்க அப்டேட்ட பாருங்க…
Kirachand
மருது சகோதரர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம்? – ஆளுநர் ஆர்.என்.ரவி
மருது சகோதரர்களை உங்களுக்கு இப்ப எப்படி நினைவு வந்துச்சி ஜி?
நெல்லை அண்ணாச்சி
நான் அந்த அளவுக்கு படித்தவன் இல்லை…எடப்பாடியார்
but…இந்த ” நேர்மை ” ரொம்ப படிச்சிருக்கு….செல்லம்…!!!
வசந்த்
எண்ணெய் சூடாகிவிட்டதா என டெஸ்ட் செய்ய முதலில் போடும் “டெஸ்டிங்”அப்பளம் கணவனுக்கு தான் வரும்.
Mannar & company™
தீபாவளிக்கு போனஸ் காசுல துணி எடுக்கிறவங்க ‘எலைட்கள்’,
தீபாவளிக்கு துணி எடுப்பதே போனஸ்னு நினைக்கிறவங்க “ஏழைகள்”!
நெல்லை அண்ணாச்சி
சின்ன பையன்னுதானேஎன் மேல் கை வச்சிட்டட….
எங்க அண்ணன் ” சிங்கம் ” மேல் கை வைக்க முடியுமா..?
…அமர் பிரசாத் ரெட்டி
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
நீ இன்று தள்ளிப் போடும் செயல்கள் அனைத்தும் நாளை உன்னை ஓய்வெடுக்க விடமால் ஓட வைக்கும்
இன்றே செய்து முடி…
கடைநிலை ஊழியன்
மச்சான் iPhone எல்லாம் வேஸ்ட் டா..
உன்னால வாங்க முடியாதனால தான அப்படி சொல்ற..
ஆமா.. பின்ன நீ மட்டும் வாங்குனா எப்படி..
balebalu
ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?
விலை கம்மி ஆகிருச்சு ன்னு வெண்டைக்காயை கொட்டினமாதிரி
ஷேர் விலை கம்மி ஆகிருச்சு ன்னு எல்லார் அக்கவுன்ட் லயும் ஏன் ஃப்ரீயா வரவு வைக்க மாட்டேங்குறாங்க ன்னு கேக்குறாம்ப்பா
கோழியின் கிறுக்கல்!!
இப்பெல்லாம் எந்த பாட்டை கேட்டாலும்,
அந்த பாட்டு மோடி வாய்ஸ்ல தான் மண்டைக்குள்ள ஓடுது!!
லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை வந்த குடியரசுத் தலைவர்: வரவேற்ற ஆளுநர், முதல்வர்!