சுதந்திர போராட்ட வீராங்கணை வேலு நாச்சியார் பிறந்தநாளை ஒட்டி அவரோட போட்டோவுக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்துற போட்டோவ நண்பர் ஒருத்தர் இன்னைக்கு அனுப்பி வச்சாரு.
“என்னை நண்பா வொர்க் ஃபிரம் ஹோமான்னு” கேட்டேன்.
“இல்லை நண்பா. ஆபிஸ்ல தான் இருக்கேன்னு” சொன்னாரு.
“உங்கள கேக்கல. நம்ம விஜய்ய சொன்னேன். பெரியார், முத்துராமலிங்க தேவர்னு தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாளுக்கெல்லாம் விஜய் அவரோட வீட்டுலையே போட்டாவுக்கு மரியாதை செலுத்திறாரே, அதான் விஜய் பாலிடிக்ஸ்ல வொர்க் ஃபிரம் ஹோம் பண்றாரான்னு” கேட்டேன்.
“ஆமாமா… அவரோட கடைசி படம் முடியுற வரைக்கும் வொர்க் ஃபிரம் ஹோம் தான்னு” நண்பர் சொன்னாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
பனையூரிலிருந்து காலண்டர் வந்திருக்கு அண்ணே
அப்படி என்னடா ஸ்பெஷல் ?
எந்த தலைவருக்கு பொறந்த நாளு, யாருக்கெல்லாம் அஞ்சலி செலுத்தி மாலை போடணும் ன்னு எல்லா தகவலும் இருக்கு அண்ணே

ArulrajArun
இப்போ இருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வர்றாங்களா இல்ல வடிவேல் செந்தில் கவுண்டமணி இல்லாத குறையை தீர்க்க வர்றாங்களா ன்னு தெரியல …

????????????
ஜோசியர் ~ இந்த 2025 ல நீ நினைக்குறதுலாம் நடக்கும்
Me ~ 2025 காலண்டர் வாங்கனும்னு நெனச்சேன் அதுவே இன்னும் நடக்கலடா

ச ப் பா ணி
பணிவாக நடப்பதில்.. பணிவாக நடிப்பதும் அடங்கியுள்ளது.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எலேய் சின்னச்சாமி மவனே.. ஏன்டா படத்தை ரிலீஸ் பண்றேன்னு சொல்லிட்டு ரிலீஸ் பண்ணாம தள்ளி தள்ளி போடறீங்க..?
தள்ளி பேடாம..? நாங்க தான் படத்தை யாரும் பார்க்க விடாம முயற்சி பண்ணுவோம்னு பட டைட்டில்லயே சொல்லிட்டமே..

கோழியின் கிறுக்கல்!!
விபத்து நடந்த இடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தால், வீடு போய் சேர முடியாது,
அது போலவே வாழ்க்கையிலும்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
சீனாவில் பரவும் புதிய வைரஸ் : அச்சத்தில் உலக நாடுகள்!
அரசு நிகழ்ச்சியில் உதவியாளரை அதட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே – சர்ச்சையான அந்த வார்த்தை!