பனையூர் கூட்டணி தெரியுமா? : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு பாமக பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்துல நடந்துச்சு… அப்போ பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு சண்டையாம். அதாங்க கட்சி மேடையில அப்பாவும், மகனும் சண்ட போட்டிருக்காங்க.

அப்போ ‘இனிமே எல்லோரும் என்ன பாக்கனும்னா பனையூர் ஆபிஸ் வந்துருங்க’னு சொல்லிருக்காரு அன்புமணி

எனக்கு ஒன்னும் புரியல… எதுக்கு இந்த அரசியல் தலைவர்கள் எல்லாம் பனையூர்ல இருக்காங்கனு? அங்க தான் விஜய், அண்ணாமலை, சீமான் இருக்காங்க… இப்போ அன்புமணியும் பனையூருக்கு கூப்பிடுறாரு…

ஒருவேள 2026ல பனையூர் கூட்டணினு ஒரு தனி கூட்டணி உருவாகும் போல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

கோழியின் கிறுக்கல்!!
அப்பா கூட சண்டை போட்டு கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம்,
பனையூரில் தான் அலுவலகம் வைத்திருப்பார்கள் போல!!

balebalu
என்னது
பொலிட்டிகல் சயின்ஸ் பாட பிரிவுல ‘சாட்டையால எப்படி அடிச்சுக்கிறது ‘ ன்னு புது சிலபஸ் சேர்க்க போறாங்களா.

Sasikumar J
~ சனி பிரதோஷம் கோயில்ல ஒரே கூட்டம் சாமிய பார்க்கவா…!
~ இல்ல பிரசாதம் வாங்க தான்…!

????????????????????????????
சொர்கத்துக்கு செல்ல ஆசை பட்டா என்ன செய்யணும் தெரியுமா??
~என்ன செய்யணும்?
முதல்ல சாகனும்.

ச ப் பா ணி
ஒத்த சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பத்தை விடவா
பரபரப்பானது உலகம்

Joe..
எனக்கு பனையூர்ல ஒரு ஆபீஸ் இருக்கு.. நேர்ல வந்து பாருங்க..
~ பனையூர்ல ஆபீஸ் இருந்தாலே மக்கள்தான் நேர்ல போகணும் போல.

கோழியின் கிறுக்கல்!!
நாளைக்கு Ktvல அப்பா மகன் குடும்ப சண்டையை மையமாக வைத்து வெளி வந்த Superhit திரைப்படம், “சம்சாரம் அது மின்சாரம்” தான் போடுவாங்க பாருங்க!!

ArulrajArun
“இருட்டு”கடை அல்வா தான் அந்த கடை முதலாளி வாழ்க்கையில் நல்ல “வெளிச்சத்தை” காட்டுகிறது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

லாக் ஆஃப்

போட்டி போட்டுப் பாத்துடுவோமா? ஐ.டி.விங் கூட்டத்தில் செந்தில்பாலாஜி போட்ட போடு!

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தினமும் 10 முட்டை கொடுத்தாரா ஞானசேகர்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share