இன்னைக்கு ஆபிஸ்ல நண்பன் ஒருத்தன் கூட பேசிக்கிட்டு இருந்தேன்…
“நம்ம அண்ணாமலை அண்ணன் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புற வரைக்கும் செருப்பு போட மாட்டேன். நாளைக்கு சாட்டையால அடிச்சி கவன ஈர்ப்பு போராட்டத்துல ஈடுபடப்போறேன்னு சொல்லிருக்காராமே” பார்த்தீங்களான்னு கேட்டாப்ள…
“ஆமாமா நானும் அந்த ஆவேச பேட்டிய பார்த்தேன். லண்டன்ல போய் அரசியல் படிச்சாருல்ல. அதுல Different ways of Protestsனு ஒரு பாடம் இருக்காம். லண்டன்ல படிச்சத தான் இங்க அப்ளை பண்ணி பார்க்குறாராம்னு” சொன்னேன்.
“போ நண்பா… நீ என்னமோ இங்கிலாந்து, லண்டன் ரேஞ்சுக்கு பேசுற. எனக்கென்னமோ இதை பார்த்தா குரளி வித்தை காட்ற மாதிரிலா இருக்குன்னு” பொசுக்குன்னு சொல்லிட்டு போய்ட்டான்.
நீங்கள் அப்டேட்ஸ் பாருங்க..

Sasikumar J
”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்…!
ஒருவேளை இது தான் லண்டன் ல சொல்லி கொடுத்த அரசியல்யா இருக்குமோ…!!
ச ப் பா ணி
பச்சை விளக்கிற்காக
காத்துக் கொண்டிருக்கின்றன
அத்தனை பேரின் அவசரங்களும்.!

H.Umar Farook
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 85.40 ஆக சரிவு
-துபாய்ல பிரதமருக்கு உயரிய விருது கொடுத்திருக்காங்க அதைப்பற்றி பேசலாம்ல !
ArulrajArun
இனி உங்கள வேற மாறி தான் Deal பண்ணப்போறோம் – அண்ணாமலை
-எது செருப்பு போடாம விரதம் இருக்குறது உங்க ஊர்ல வேற மாறி Deal பண்றதா …

Sasikumar J
எல்லாரும் லீவுல இருக்கும்போது நம்ம ஆபீஸ் போறது ஒரு வகை ஜாலிதான் வேலையும் கம்மியா இருக்கும், எல்லாரும் லீவு இருந்தாலும் வேலைக்கு வந்தான் அப்படின்னுகிற பெயரும் இருக்கும்…!
மயக்குநன்
பதவி சுகத்திற்காக யார் காலில் வேண்டுமானாலும் திமுகவினர் விழுவார்கள்!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அண்ணே… அது கண்ணாடி..!

கோழியின் கிறுக்கல்!!
தேடி வந்து அன்பு செலுத்துபவரை உதாசீனப்படுத்தினால்,
பிறகு எவ்வளவு தேடினாலும் அந்த அன்பு கிடைக்காது!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
எப்.ஐ.ஆர் லீக் விவகாரம் : தமிழக டிஜிபிக்கு பறந்த உத்தரவு!
என்ன எப்.ஐ.ஆர் இது… வெட்கமில்லையா? சாட்டையடி போராட்டத்தை அறிவித்த அண்ணாமலை