இதுக்கெல்லாம் வெட்கப்படலாமா… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

“காலையிலேயே சர்ச்சுக்கு போய் கிறிஸ்மஸ் செலிப்ரேட் பண்ணிட்டு வந்தாச்சு மாப்ளன்னு” சொன்னான்.

“ஆச்சரியாமா இருக்கே… சர்ச்சுக்கு போனியான்னு” கேட்டேன்.

“இல்ல மாப்ள… கிறிஸ்மஸ்கு சர்ச்சுல ப்ளம் கேக் கொடுப்பாங்க நல்லாயிருக்கும். அதான் போனேன்னு” வெட்கமே இல்லாம சொல்றான்.

ஏழுகழுதை வயசாகுது… இவனெல்லாம் வச்சி என்ன பண்றது.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையை டக் கென்று விருந்தினர்களுக்கு காட்டி கொடுத்து விடுகிறது
-டெய்லி கேலண்டர்

நெல்லை அண்ணாச்சி
அரசு தேர்வு
விண்ணப்பங்களுக்கு GST..18%
-இப்ப சந்தோசமா..?…தாயி..!!

ச ப் பா ணி
மார்கழியில் கேட்கும் ஜேசுதாசின் குரலுக்கு
கூடுதல் மகத்துவம்
-சரணம் ஐயப்பா

ArulrajArun
எதிரியை காட்டி காட்டி தான் துரோகிகளுக்கு பாடம் கற்று தர முடியும்

தர்மஅடி தர்மலிங்கம்
நேரு குடும்பத்துக்கு உதவ அரசியல் சாசனத்தில் பல திருத்தங்களை காங்கிரஸ் செய்தது – நிர்மலா சீதாராமன்!
அதானி குடும்பத்துக்கு உதவ பல திருத்தங்களை செய்தது மாதிரிங்களா.?!

Joe..
உதவின்னா அரிசி, பருப்பு கொடுக்கணும்,
கண்டனம்னா போஸ்ட் போடணும்,
மரியாதைன்னா போட்டோக்கு மாலை போடணும்.
எவ்ளோ ஈஸியா இருக்குதே அரசியல்.

H.Umar Farook
தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் படத்தோட ஹீரோவை கைது பண்ணினாங்களே

இதே போல் அரசியல்வாதிகளில் பொதுக்கூட்டங்களில் சிக்கி உயிரிழந்தால் அந்த அரசியல்வாதியை கதை பண்ணுவாங்களா ?

சரவணன். ????
பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது – விஜய்
இருக்கு.. நாளைக்கு அந்த அக்யூஸ்ட்டுகளுக்கு பனையூர்ல கடுமையான பனிஷ்மென்ட் இருக்கு..

balebalu
ரொம்ப நாள் டேரா போட்ட விருந்தாளி ஒருவழியா ஊருக்கு கிளம்பியாச்சு ன்னு நிம்மதி பெருமூச்சு விடும்போது
வழி தெரியல்ல ,பஸ் கிடைக்கல ன்னு சொல்லி திரும்ப மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வரும் மனநிலை
-சென்னை மழை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

தரையிறங்க 3 நிமிடம்தான்: தீ பற்றி விழுந்த விமானம்… 67 பேர் கதி என்ன?

மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தை அரசியல் படுத்த வேண்டாம்: உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share