இன்னிக்கு ஆபிச முடிச்சிட்டு அப்படியே மெரினாவுல போட்ருக்க உணவு திருவிழாவுக்கு நண்பனோட போனேன்…
அப்ப அவன், நாளைக்கு கிறிஸ்துமஸ்… இன்னும் ஒரு வாரத்துல நியூ இயர் வர போகுது… இந்த வருசத்துல என்ன சாதிச்சனு கேட்டான்…
அதுக்கு, ‘நான் சாதிச்சத விட உன்ன மாதிரி ஆளுங்கள் என்ன சோதிச்சதுதான் அதிகம். எங்க சாதிக்க விடுறிங்கனு சொன்னேன்…
கம்னு வாய மூடிகிட்டான்…
அப்புறம் உணவு திருவிழாவ சுத்தி பாத்துட்டு வந்துட்டோம்
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
சினிமா அளவுக்கு கூட அரசியல்ல அவுட்டோர் போக மாட்டார் போல
கட்சி தொடங்கினதில் இருந்து எல்லாமே
வீடு , அலுவலகம் , ட்விட்டர் ன்னு மட்டுமே இருக்கு
ச ப் பா ணி
திருப்பதி வெங்கடாசலபதி காலண்டர் வீட்டில் இருந்தால் பணம் பெருகும் என்பது தாத்தா காலத்து டெக்னிக்

ArulrajArun
மழை வருது மழை வருது குடை கொண்டு வா – 90s kids
குடை எல்லாம் கொண்டு வர முடியாது புயல் கரையை கடந்துருச்சு போவியான் -2k kids..
mohanram.ko
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும்,
எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே
பெரிய வேறுபாடு – செய்தி
ஓட்டு பெட்டிக்குள்ளே யே குட்டி போடும்

balebalu
திருமண மண்டபங்கள்
தற்காலிக கண்காட்சி கூடமாக
உருமாற்றம் பெறுகின்றன
-மார்கழி

ச ப் பா ணி
மார்கழியில் கேட்கும் ஜேசுதாசின் குரலுக்கு
கூடுதல் மகத்துவம்
-சரணம் ஐயப்பா
மயக்குநன்
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ளன!- எடப்பாடி பழனிசாமி.
’14 அமாவாசைகளே உள்ளன’னு உங்க பாணியில் சொல்லுங்க தலைவரே..!

கோழியின் கிறுக்கல்!!
நாம் ‘நல்லா இருக்கோமா இல்லையா?’ என்கிற குழப்பதிலேயே பாதி வாழ்க்கை போய் விடுகிறது!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜெயலலிதாவை மறந்தாரா எடப்பாடி பழனிசாமி… எம்.ஜி.ஆர் சமாதியில் டென்ஷனான சசிகலா… நடந்தது என்ன?
டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்த் குருபூஜை… பாஜகவோடு இணைகிறதா தேமுதிக?