ஓப்பனிங்லாம் நல்லாதான் இருக்கு… பினிஷிங் சரி இல்லையேப்பா – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு ஆபிஸ்ல நண்பன் ஒருத்தன் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். விடுதலை 2 படத்துக்கு நாளைக்கு டிக்கெட் புக் பண்ணிட்டதா சொன்னான்.

“டேய்… எந்த நம்பிக்கையில படத்துக்கு டிக்கெட் புக் பண்ணேன்னு” கேட்டேன்.

“என்னாச்சு மாப்ள… ஏதாவது பிரச்சனையா? ரிலீஸ் தள்ளி வச்சிட்டாங்களான்னு” அதிர்ச்சியோட கேட்டான்.

“இல்லை… நம்ம வெற்றி மாறன் கடைசி ஒரு வாரமா தான் படத்தோட ஃபினிஷிங் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு சொன்னாங்க. அதான் கேட்டேன்”

“அடப்பாவி… இதெல்லாம் ஒரு மேட்டரா. எக்ஸாம்க்கு கடைசி நேரத்துல ஹாலுக்கு போறதுக்கு முன்னாடி படிப்போம்ல, அதே மாதிரி தான் நம்ம வெற்றி மாறன். ஆனா ஒன்னு படத்துலயும் சரி, படம் ரிலீஸ் ஆகுறதுலயும் சரி கடைசி நேரம் வரை ஆடியன்ஸ பதட்டத்தோடவே வச்சிருக்காருன்னு” சொன்னான்.

சரி நாளைக்கு படம் ரிலீஸ் ஆனா மெசேஜ் பண்ணுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
“மிஸ் இவன் என்னை கிள்ளிட்டான்” என்ற சண்டை முன்பு
வகுப்பில் மட்டுமே நடந்தது

ச ப் பா ணி
எப்போதும் ஆன்லைனில் இருக்கும் மனிதனுக்கு முன்னோடி எறும்புகள் தான்

Sasikumar J
~ ரொம்ப ட்ரையா இருக்கு மச்சி…!
~ என்ன ஃபோன் பேட்டரியா..!
~ இல்லடா பேங்க் பேலன்ஸ்…!

ச ப் பா ணி
மெளனங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறது தனிமை

mohanram.ko
பார்லிமென்ட்ல – ஆஸ்கார் அவார்டா கொடுக்க போறாங்க… இப்படி நடிக்கற…

மயக்குநன்
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்!- இபிஎஸ்.
அப்ப… இப்பவே தமிழ்நாட்டில் ‘அம்மா ஆட்சி’தான் நடந்துக்கிட்டு இருக்குன்னு சொல்லுங்க..!

புகழ்
வயிறு எரிச்சல் என்பது உடல் கோளாறு ..
வயிற்றெரிச்சல் என்பது மனக்கோளாறு..

amudu
காதலிக்கும் போது கவிஞர்களாக இருந்த பலர், கல்யாணத்திற்கு பிறகு தத்துவ ஞானிகளாகி விடுகிறார்கள்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆன்லைன் மருந்து விற்பனை: எப்போது தீர்ப்பு?

ஹெல்த் ஹேமா: வறட்சியைத் தடுக்கும் பானங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share