இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்க இல்ல… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கால் பண்ணி, “மாப்ள ஒரு சம்பவமாகிருச்சுடான்னு” பதட்டத்தோடவே சொன்னான்.

“என்னடா என்னாச்சுன்னு” கேட்டேன்.

“இல்ல மாப்ள… இன்னைக்கு காலையில என் ஆளு கால் பண்ணா. அவ நம்பர வேற மொபைல்ல நான் சேவ் பண்ணல. எங்கப்பா போனை எடுத்துட்டாரு. அப்பா குரல் கேட்டதும் அவ கட் பண்ணிட்டா.

எங்கப்பா வேற, யாரு அந்த பொண்ணு. மகேஷ் செல்லம்னு உன் பேரை சரியா சொல்லுதுன்னு கேட்குறாரு. என்ன பண்றதுன்னே தெரியலன்னு” பொலம்பிக்கிட்டு இருந்தான்.

“சிம்பிள் மாப்ள… ஃபிரெண்டு ஒருத்தன் ஏஐ-ல வொர்க் பண்றான். அடிக்கடி இப்படி போன் போட்டு யாரையாவது கலாய்ப்பான்னு சொல்லிரு”

“டேய் அவரு நம்புவாரா?”

“அம்பேத்கர் பத்தி நாடாளுமன்றத்துல சர்ச்சையா பேசிட்டு என் குரலை ஏஐ மூலமா காங்கிரஸ் கட்சி மாத்திட்டாங்கன்னு அமித்ஷா சொல்றாரு. அதையே நம்ம மக்கள் நம்பும் போது… இதை உங்க அப்பா நம்ப மாட்டாரா டா”

“சரி மாப்ள ட்ரை பண்ணி பார்க்குறேன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

balebalu
AI நவ் : நீங்க தப்பு தப்பா பேசுறதுக்கு
பழியை தூக்கி போட
நான்தான் கிடைச்சேனா

நெல்லை அண்ணாச்சி
பாராளுமன்றத்தில் பாதிபேர் ஓட்டுச்சீட்டு…மீதிபேர் EVM…
500 சொச்சம் ஆட்களுக்கே
” ஒரே தேர்தல் ” முடியல….!!

ச ப் பா ணி
அடுத்தவங்க நம்பிக்கையை சம்பாதிக்கிறதுல..
என்னைக்கும் நஷ்டம் வராம பார்த்துக்கனும்

தர்மஅடி தர்மலிங்கம்
புயலைவிட வேகமாக செயல்பட்டது அதிமுக அரசு – ஆர்.பி.உதயகுமார்

அதான்… ஆளுங்கட்சியா இருந்த அதிமுக இப்போ எதிர்கட்சியாக இருக்கோ.?!

SANKARRAMANI
ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக பிரதமர் தெரிவித்தார்.
“இவ்வளவு கொடூரமா உங்கள வேலை வாங்குறது யாருஜி?”
“அந்த அதானிதான்.”

மயக்குநன்
அதிமுகவை முடக்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது!- இபிஎஸ்.
தலைவர் அறிவாலயத்தைக் குறை சொல்றாரா… கமலாலயத்தைக் குறை சொல்றாரா..?!

Sasikumar J
கருவேப்பிலையா இருந்தாலும், ஆம்பள பிள்ளையா இருந்தாலும் வெளியே இருக்கிற வரைக்கும் தான் மரியாதை வீட்டுக்கு வந்தா இருக்குறது இல்ல…!

ச ப் பா ணி
அவளும் தூசி போலத்தான்
அடிக்கடி…என்னை
கண் கலங்க வைத்துவிடுவதால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உயர்வு… தமிழக அரசு உத்தரவு!

இந்திய முட்டைகளுக்கு கத்தார், ஓமன் தடை: நாமக்கல்லை தாக்கும் துருக்கி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share