ஒரே நாடு ஒரே புயல் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு நண்போரட இந்த கூல் க்ளைமேட்டுக்கு சூடா ஒரு காபி சாப்பிலாம்னு போனேன்…

அப்ப, இன்னைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் பன்னி, நாடு முழுதும் புயல கிளப்பியிருக்காங்கனு சொன்னேன்…

அதுக்கு அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரி… ஒரே நாடு ஒரே புயல்னு இருந்தா நல்லாருக்கும்… வாரத்துக்கு ஒன்னு வந்து உசுர வாங்கிருதுனு சொல்றாரு…

அய்யோ… இப்ப யார் உசுர யார் வாங்குறானு தெரில சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…


ச ப் பா ணி
2026 இல் தேமுதிக ஆட்சி நிச்சயம் – பிரேமலதா விஜயகாந்த் சூளுரை.
-எல்லோரும் இந்நாட்டு முதலமைச்சர்கள்

balebalu
இதமான வெய்யில் ,சிலு சிலு காற்று , லேசான குளிர் ன்னு இன்று சென்னையில்
செலவில்லாமல் ஊட்டி கிளைமேட்

Mannar & company™
சரியான நேரத்தைக் காட்டாத கடிகாரமும்,
சரியான நேரத்தில் கொடுக்காத காலண்டரும் வீண்தான்!
-காலண்டர்_ட்வீட்கள்

????????????????????????????
யார் பேச்சையும் கேக்காதவனும், எல்லார் பேச்சையும் கேப்பவனும் நல்லா வந்ததா சரித்திரமே இல்ல!!!

ச ப் பா ணி
சனிப்பெயர்ச்சி இல்லாத ராசிக்காரர் பாடும் பாட்டு
“என்னோட ராசி நல்ல ராசி…

தர்மஅடி தர்மலிங்கம்
தமிழ் அறிஞர்களை ஷேக்ஸ்பியரோடு ஒப்பிடுவதா? – ஆளுநர் ரவி!
நீங்க மட்டும் தமிழோடு சமஸ்கிருதத்தை ஒப்பிடுவதா?

மயக்குநன்
விசிகவுக்கும், தவெகவுக்கும் இடையே ‘மோதல்’ எதுவும் இல்லை!- திருமாவளவன்.
தேர்தல் சமயத்தில் ‘காதல்’ வர வாய்ப்பிருக்கா தலைவரே..?!

கோழியின் கிறுக்கல்!!
அன்பு என்பது வீட்டு நாய் போல வேடமணிந்த,

ஒரு வேட்டை நாய்!!

ச ப் பா ணி
மார்கழிமாசம் பொறந்தா போதும், சின்ராசுக்கு எக்ஸ்ட்ரா இறக்கை முளைச்ச மாதிரி.. அவ்வளவு வேகமா சுத்துவான்- fan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி?: டிடிவி தினகரன், அண்ணாமலை பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share