இதுதான் வித்தியாசம் போல : அப்டேட் குமாரு

இன்னைக்கு டீக்கடைக்கு போனா, அங்க 90’ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ் சண்ட போட்டுட்டு இருந்தாங்க… என்னனு பக்கத்துல போய் பாத்தா….

‘பேப்பர்ல கப்பல் செஞ்சி முதல்ல மழைத்தண்ணில விட்டது நாங்க தான்’னு 90’ஸ் சொன்னாங்க… ’அதே முட்டியளவு மழைதண்ணில முதல்ல முங்கு நீச்சல் அடிச்சது நாங்க தான்’னு 80ஸ் சொல்லிட்டு இருந்தாங்க…

இவங்க சண்டய அழகா படம்பிடிச்சிட்டு இருந்த 2k கிட் பையன்… ’இத யூடிப்ல போட்டா நல்லா ரெவன்யூ கிடைக்கும்’னு சொல்லிட்டு போறான். இல்ல நைசா ‘90’ஸ் 80ஸ் கிட்ஸ்களுக்கு பாடம் எடுத்துட்டு போறான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க


balebalu
எதுக்குடா அவசரமா மந்திரியை சந்திக்கணும் ன்னு சொல்லுற
இந்த மெரினா பீச், ரிப்பன் பில்டிங் ல்லாம் வாங்கணும் ன்னு ரொம்ப நாளா ஆசையா இருக்கு அண்ணே
அதான் கேட்டு பார்க்கலாம் ன்னு …

நெல்லை அண்ணாச்சி
ஊரெல்லாம் சூப்பர் ஸ்டார்
” 74 ” வது பிறந்தநாள் சுவரொட்டிகள்…

வயசை கேட்டேனா… …முருகேசா…!!!?

Sasikumar J
புதுவையில் அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலை பேசிய லேடி சூப்பர் ஸ்டார் கணவர் விக்னேஷ் சிவன்

அண்ணே அது Government Hotel…

சரி அந்த பீச் என்ன விலைன்னு கேளு?

Sasikumar J
வாழ்க்கையில் வலியோடு வழி தேடும்போது புதிய பாதை உதயமாகிறது….!

ச ப் பா ணி
டெல்லியில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,100 உரிமைத்தொகை வழங்கப்படும் – அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

வாக்குறுதின்னாலே இதுதான் வந்துடுது

Writer SJB✒️
அந்தப் பாண்டிச்சேரி பீச் என்ன விலைனு கேளு,,

அந்த ஆரோவில் என்ன விலைனு கேளு,,

ஐயோ நெட் பிலிக்ஸ் காரன் கொடுத்த காசுல நான் எதையாவது இப்போ வாங்கியே ஆகணுமே..!

கோழியின் கிறுக்கல்!!

90ஸ் கிட்ஸின் வாழ்வு துயரமானது,
தன்னை பெத்தவங்க கிட்டயும் திட்டு வாங்கணும், தான் பெத்ததுங்க கிட்டயும் திட்டு வாங்கணும்!!

ச ப் பா ணி
மற்ற நாட்களில் சகுனம் பார்ப்பது மாதிரி தான்..
மழை நாட்களில் ஸ்கூலுக்கு கிளம்பும் முன் குழந்தைகள் நியூஸ் பார்ப்பதும்

லாக் ஆஃப்

சாப்பாட்டுல அடிச்சுக்க முடியாத நகரங்கள் பட்டியல்… சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

முதல் ’வைக்கம் விருது’ பெற்ற புரட்சி எழுத்தாளர்! யார் இந்த தேவநூர் மகாதேவா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts