வைக்கம் போராட்டத்தில் சீமானா? – அப்டேட் குமாரு

வைக்கத்துல ரீ மாடல் பண்ண பெரியார் நினைவகத்தை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் இன்னைக்கு கேரளா போயிருக்காரு…

அங்க போகுறதுக்கு முன்னாடி வைக்கம் போராட்டத்தை ஒரு வீடியோவ அவரோட எக்ஸ் பக்கத்துல போட்டுருந்தாரு…

அந்த வீடியோவ பாத்துட்டுருக்கையில திடீர்னு பார்த்தா, சீமானோட உருவம் தெரிஞ்சது…. இத பாத்து ஷாக் ஆகி நண்பன்கிட்ட காமிச்சா… அவன், ’இன்னும் பாரு அதுல எடப்பாடி உருவம் கூட தெரிதுனு சொல்றான்…

யாருய்யா அந்த எடிட்டரு…. எனக்கே பாக்கனும் போல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க


balebalu
ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில்
பைக் டாக்ஸி க்கு எதிர்ப்பு – செய்தி
யாரு யாரை எதிர்க்கிறது ன்னு ஒரு நியாயம் வேண்டாமா

mohanram.ko
என்னடா இது, பாத் ரூம், ரெஸ்ட் ரூம் ல கூட காலண்டர் மாட்டி வச்சிருக்க..
ஆமாம் ணே, எல்லா கடையிலும் காலண்டர் கொடுத்தா அப்படித்தான் ணே மாட்டணும்

நெல்லை அண்ணாச்சி
10 நாளா பாராளுமன்றம்
வரலியே ஏன்….ஜி
அதானிய காப்பாற்றணும்

balebalu
ஏண்டா வழக்கமா ஆன்லைன் ல ஆர்டர் போடுவ
இந்த தடவை கடைக்கு நேர்ல போகணும் ன்னு
குதியா குதிக்குற
ஆமாண்ணே டிசம்பர் மாசமாச்சே
காலண்டர் கிடைக்கும் ல்ல

mohanram.ko
ஜிடிபி குறைவா இருக்கே, என்ன பண்ண போறீங்க
ஜி யோட டிபி யை வாட்ஸ் அப் ல வைக்க சொல்ல போறோம்… ஜி’டிபி அதிகமாயிடும்…

ச ப் பா ணி
நான் இருக்கிறேன் என்பது தைரியம்
நான் தான் இருக்கேன்ல என்பது இம்சை

கோழியின் கிறுக்கல்!!
Pan India படம் எடுக்கிறது முக்கியம் இல்லை,
Audience பார்க்கிற மாதிரி படம் எடுக்கணும்யா!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

லாக் ஆஃப்

ஆறு நாட்களில் ஆயிரம் கோடி : பிரபாஸ், ஷாரூக் பட வசூலை மிஞ்சிய புஷ்பா 2

ஸ்டாலின் வந்தல்லே… வைக்கம் வரலாற்றைப் புதுப்பிக்க வந்தல்லே…’ – கேரளாவில் வேலு செய்த முக்கிய வேலை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts